மியான்மரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.., 59 பேர் உயிரிழப்பு.?
மியான்மரில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பாங்காக் : அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் (7.7, 6.4) மியான்மர் மக்கள் மிரண்டு போயுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை 59 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மாண்டலே நகரில் மசூதி இடித்து விழுந்ததால், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பலர் பலியானதாகக் கூறப்படுகிறது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் கோர காட்சிகள் வெளியாகி மனதைப் பதற வைக்கின்றன.
அந்த வகையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டு வந்த 30 மாடிக் கட்டடம் அப்படியே சரிந்து விழுந்தது. இதில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் 43 பேர், கட்டட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதனிடையே, தாய்லாந்தில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மியான்மரில் இணையதளம் ரத்தாகி இருப்பதால் தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல்கள் ஆரம்பகட்ட அறிக்கைகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. மீட்பு பணிகள் முடிவடைந்த பிறகே, சரியான பலி எண்ணிக்கை தெரியவரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025