பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! 6.1 ரிக்டர் அளவில் பதிவு..!
பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் மாஸ்பேட் பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ரிக்டர் என்று அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யூஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மத்திய பிலிப்பைன்ஸின் முக்கிய நகரமான மாஸ்பேட்டில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளதாக யூஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது. கட்டிடங்களின் அதிர்வால் அச்சமடைந்த சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
மேலும் நிலநடுக்கத்தினால் பெரிதளவில் சேதம் மற்றும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.