நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் 4.5 ஆக பதிவு..!
நேபாளத்தில் 4.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மலைப்பகுதியான நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 450 கிமீ மேற்கே அமைந்துள்ள பஜாங் மாவட்டத்தில் கிழக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு நேபாளத்தில் உள்ள பஜாங் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் 5.2 மற்றும் 4.1 ரிக்டர் அளவுவில் பதிவான இரண்டு நிலநடுக்கங்கள் இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.