நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.1 ஆக பதிவு
நேபாளத்தில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள காரணத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் 6.35 மணிக்கு ஏற்பட்டது. லாபுசே நகரத்திலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் ஏற்ப்பட்ட காரணத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியே சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் அந்த இடத்தில் உள்ள கட்டடங்கள் குலுங்கின, ஆனால் இதுவரை பொருட் சேதம் அல்லது உயிரிழப்பு தொடர்பாக எந்தவொரு அறிவிப்புகளும் வெளியாகவில்லை.இந்த நிலநடுக்கம், நேபாளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலும் உணரப்பட்டது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. பேப்ரவரி 25, 2015 அன்று, 7.8 ரிக்டர் அளவில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் நேபாளத்தில் ஏற்பட்டது. இதன் காரணமாக, 8000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நிலநடுக்கம் மற்றும் அதன் பிறகு வரும் நிலபரப்பு மற்றும் புவி அதிர்வுகளால், பன்முகக் கட்டிடங்கள் மற்றும் பழமைவட்டமான பொருட்கள் பாதிக்கப்பட்டன. சுமார் 8 லட்சம் மக்கள் வீட்டுப்பற்றிய சேதங்களை சந்தித்து, பல சிரமங்களையும் எதிர்கொண்டனர். அதில் இருந்து நேப்பாளத்தில் நிலநடுக்கம் வந்தது என்றாலே மக்களுக்கு பெரிய அதிர்ச்சியாக தான் இருந்து வருகிறது.
ஆனால், இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களில் ஒரு சில இடங்களில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. மேலும் வங்கதேசம், இந்தியா, பூடான், சீனாவிலும் எதிரொலித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.