ஜப்பானின் டொரிஷிமா தீவுப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!
ஜப்பானின் டொரிஷிமா தீவுப் பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
டோக்கியோ: திபெத், நேபாளத்தை தொடர்ந்து, ஜப்பானிலும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானில் உள்ள டோரிஷிமா தீவுப் பகுதியில் இன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு உள்ளார் நேரப்படி மாலை 5:32 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், டோரிஷிமா தீவுகளின் அருகிலுள்ள கடலில் உணரப்பட்டுள்ளது. ஜப்பானிய நில அதிர்வு அளவு 7 இல் 2 ஆக இருந்தது என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜேஎம்ஏ) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 420 கி.மீ ஆழத்தில் வடக்கு 31.4 டிகிரி அட்சரேகையிலும், கிழக்கே 138.7 டிகிரி தீர்க்கரேகையிலும் அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் (ஜேஎம்ஏ) மேலும் தெரிவித்துள்ளது.
FLASH: 6.0-MAGNITUDE EARTHQUAKE ROCKS JAPAN’S TORISHIMA ISLAND REGION: JMA pic.twitter.com/w6GyoKCZ8M
— China Xinhua News (@XHNews) January 7, 2025