ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் ட்ரம்ப் மீதான வழக்கில் வரும் 10ம் தேதி தண்டனை விபரங்களை நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

donald trump sad

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த வழக்கில் சிக்கியுள்ளார்.  கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு டிரம்ப் அவருக்கு பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு டிரம்ப் தன்னை  ரெனோ, நெவாடாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்தார் எனவும், தன்னுடன் இருந்தால் டிரம்ப் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியான “The Apprentice“-இல் பங்கேற்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று கூறியதாக டேனியல்ஸ் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம், 2016 ஆம் ஆண்டு  அமெரிக்க தேர்தலின் போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, இந்த விவகாரத்தில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், டிரம்புக்கு எதிரான தண்டனை ஜனவரி 10, 2025 அன்று அறிவிக்கப்படும் என நியூயார்க் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  வரும் ஜனவரி 20-ஆம் தேதி நாட்டின் அதிபராக பதவியேற்க உள்ளார். இந்த சூழலில், அவர் பதவி ஏற்பதற்கு முன்பு அவருக்கு எதிரான தண்டனை வழங்கப்படவுள்ளதாக வெளியான அறிவிப்பு அவருடைய ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

டிரம்பின் வழக்கறிஞர்கள், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரியிருந்தாலும், நீதிபதி ஜுவான் மெர்ச்சன் அதை நிராகரித்துள்ளார். இந்த வழக்கில், டிரம்புக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் எனவும் முன்னதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது கிடைத்த தகவலின் படி, இவ்வழக்கில் சிறை தண்டனை அவருக்கு வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள்  இல்லாமல் அபராதம் மட்டும் விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இருப்பினும் சிறை தண்டனை வழங்கப்படவில்லை என்றாலும் கூட,  நீதிமன்றம் வழங்கிய தண்டனையை பெற்றுக்கொண்டு  வெள்ளை மாளிகையில் நுழையும் முதல் அதிபர் என்ற மோசமான பெயர் அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்