போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!
போப் பிரான்சிஸ் விருப்பத்தின்படி வாடிகன் நகருக்கு வெளியே புனித மரியா மஜியோர் பசிலிக்காவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் தொடங்கியது. அவரது உடல் அவர் விருப்பப்படி எளிய மரப் பெட்டியில் வைக்கப்பட்டு, புனித மரியா மஜியோர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. இது 1903-க்கு பிறகு வாடிகன் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ் ஆவார்.
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர், இந்தியாவில் உள்துறை அமைச்சக உத்தரவின் பெயரில் இந்திய தேசியக்கொடி அனைத்து மாநிலங்களிலும் அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது.
போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசுத் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் என மொத்தம் 2.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இறுதி சடங்குகள் வாடிகான் நகரில் புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்றது. பிறகு அங்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வோடு தொடங்கி, பின்னர் வாடிகன் நகருக்கு வெளியே புனித மரியா மஜியோர் பசிலிக்காவிற்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
போப் பிரான்சிஸ், 2013 முதல் கத்தோலிக்க திருத்தந்தையாக பதவி வகித்தவர், சமூக நீதி, புலம்பெயர்ந்தோர் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக உலகளவில் பாராட்டப்பட்டவர். அவரது மறைவு கத்தோலிக்க சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,