கனடா நாடாளுமன்றத்தில் ஆண் அரசியல்வாதிகள் பிங்க் ஹீல்ஸ் அணிந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கனடாவில் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆண் அரசியல்வாதிகள் பலரும் பெண்கள் அணியும் பிங்க் ஹீல்ஸ் அணிந்து கொண்டு கனடா பாராளுமன்றத்திற்குள் நுழைந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் ஏன் அவ்வாறு அணிந்து வந்தனர்.? என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.
கனடா பாராளுமன்றத்தில் ஏன் பிங்க் ஹீல்ஸ்.?
பெண்களுக்கு எதிரான முறையான வன்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ‘ஹோப் இன் ஹீல்ஸ்’ நிகழ்வின் ஒரு பகுதியாக அவர்கள் இதைச் செய்தனர் என்று பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கனடாவின் போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா கூறியுள்ளார்.
மேலும், அவர் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் நம் சமூகத்தில் இன்னும் அதிகமாகவே உள்ளன. ஹோப் இன் ஹீல்ஸ் என்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை பரப்பும் ஒரு நிகழ்வாகும், அதே நேரத்தில் ஆண்களையும் சிறுவர்களையும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க ஊக்குவிக்கிறது. என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல்,நான் இப்போது பெண்களுக்கு எதிரான உடல் ரீதியாக மட்டும் இல்லாமல் எல்லா வகையிலும் வரும் வன்முறைககளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன், நமது செயல்கள் மற்றும் வார்த்தைகளின் விளைவுகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும், மேலும் நம்மைச் சுற்றியுள்ள பெண்களுக்கான இடத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…