பெண்கள் செருப்பு அணிந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்த அரசியல்வாதிகள்.! கனடாவில் வினோத எதிர்ப்பு.!

Default Image

கனடா நாடாளுமன்றத்தில் ஆண் அரசியல்வாதிகள் பிங்க் ஹீல்ஸ் அணிந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கனடாவில் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆண் அரசியல்வாதிகள் பலரும் பெண்கள் அணியும் பிங்க் ஹீல்ஸ் அணிந்து கொண்டு கனடா பாராளுமன்றத்திற்குள் நுழைந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் ஏன் அவ்வாறு அணிந்து வந்தனர்.? என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

கனடா பாராளுமன்றத்தில் ஏன் பிங்க் ஹீல்ஸ்.?

பெண்களுக்கு எதிரான முறையான வன்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ‘ஹோப் இன் ஹீல்ஸ்’ நிகழ்வின் ஒரு பகுதியாக அவர்கள் இதைச் செய்தனர் என்று பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கனடாவின் போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா கூறியுள்ளார்.

மேலும், அவர் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் நம் சமூகத்தில் இன்னும் அதிகமாகவே உள்ளன. ஹோப் இன் ஹீல்ஸ் என்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை பரப்பும் ஒரு நிகழ்வாகும், அதே நேரத்தில் ஆண்களையும் சிறுவர்களையும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க ஊக்குவிக்கிறது. என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல்,நான் இப்போது பெண்களுக்கு எதிரான உடல் ரீதியாக மட்டும் இல்லாமல் எல்லா வகையிலும் வரும் வன்முறைககளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன், நமது செயல்கள் மற்றும் வார்த்தைகளின் விளைவுகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும், மேலும் நம்மைச் சுற்றியுள்ள பெண்களுக்கான இடத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்