அமெரிக்க சட்டத்தை மீறியதா ChatGPT? சுசிர் பாலாஜி உயிரிழப்பால் சர்ச்சை

சான் பிரான்சிஸ்கோவில் சுசிர் பாலாஜியின் மரணம் தற்கொலை என போலீசாரும், மருத்துவ குழுவினரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

ChatGPT - Suchir Balaji

சான் பிரான்சிஸ்கோ : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப இயங்குதளமான OpenAI -ன் ChatGPTயை உருவாக்கியதில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றிய சுசிர் பாலாஜி என்பவர் கடந்த நவம்பர் 26ஆம் தேதி அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ChatGPT மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சில நாட்களில் பாலாஜியின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்த மரணம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த மரணம் தற்கொலை என சான் பிரான்சிஸ்கோ காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் மருத்துவ அறிக்கையிலும் இந்த மரணம் தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுசீர் பாலாஜி, கடந்த 2020இல் OpenAI நிறுவனத்தில் ChatGPT உருவாக்கத்தில் பணியாற்ற துவங்கினார். சுமார் 4 வருடங்கள் பணியற்ற பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். பணியாற்றிய காலத்தில் இறுதி ஒன்றரை வருடங்கள் ChatGPT தரவுகள் பகுப்பாய்வில் மிக முக்கிய பங்காற்றினார்.

இப்படியான சூழலில் கடந்த ஆகஸ்டில் வெளியேறிய பாலாஜி, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தளத்திற்க்கு பேட்டியளிக்கையில், ChatGPT உருவாக்குகையில் Open AI நிறுவனம் பல்வேறு அமெரிக்க தொழிலுட்ப பதிப்புரிமை சட்டத்தை மீறியுள்ளது. முதலில் பதிப்புரிமை பற்றி எனக்கு போதிய தெளிவில்லை. அதன் பிறகு GenAI நிறுவனத்திற்கு எதிராக பதிப்புரிமை பற்றிய பிரச்சனைகள் நீதிமன்றத்திற்கு வந்த பிறகு தான் தெரியவந்தது என பாலாஜி தெரிவித்து இருந்தார்.

இந்த குற்றசாட்டு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ChatGPT முதலீடுகளும் கணிசமான அளவில் குறைந்தன. மேலும், அந்நிறுவனத்தில் பணியாற்றிய தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி, தலைமை ஆராய்ச்சி அதிகாரி பாப் மெக்ரூ மற்றும் ஆராய்ச்சியின் துணைத் தலைவர் பாரெட் சோஃப் உட்பட உயர்மட்ட நிர்வாகிகள் அனைவரும் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளனர்.

இப்படியான சூழலில் சுசிர் பாலாஜி உயிரிழப்பு, அது தற்கொலை என்ற போலீசாரின் தரவுகள் ஆகியவை தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்