உலகம் முழுவதும் கொரோனா நோயை பரப்பிய சீனா தற்போது மீண்டும் ஒரு நோய் பிடியில் சிக்கி உள்ளது. சீனாவில் தற்போது குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவிடம் இருந்து குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிமோனியா பாதிப்பு குறித்து விரிவான அறிக்கையை கேட்டுள்ளது.
நிமோனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள்:
சீனாவில் பெங்ஜிங் மற்றும் லியோனிங் போன்ற நகரங்களில் அதிகமான குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது சீனாவில் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருங்கி வருவதால் இந்த நிமோனியாவால் பாதிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமபடுகின்றன. தேசிய சுகாதார ஆணையத்தின் சீன அதிகாரி கடந்த 12-ஆம் தேதி செய்தியாளர் மாநாட்டை நடத்தி சீனாவில் சுவாச நோய் பற்றிய தகவலை வழங்கினார். இந்த நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எந்த சிறப்பு அறிகுறியும் காட்டவில்லை, ஆனால் அவர்களின் உடல் வெப்பநிலை அதிகரித்து வருவதாக கூறினார்.
சீனாவில் நிமோனியாவால் அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் சீனாவில் உள்ள மருத்துவமனையில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தான் இந்த தொற்று பரவுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) குற்றம் சாட்டியுள்ளது.
அறிக்கை கேட்ட உலக சுகாதார அமைப்பு (WHO):
இதற்கிடையில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளில் இன்ஃப்ளூயன்ஸா, SARS-CoV-2, மைக்கோபிளாஸ்மா நிமோனியா இன்னும் பிற தொற்றுகள் ஆகியனவற்றின் தொடர்பான கூடுதல் நிலவரம் குறித்து தெளிவான அறிக்கை அளிக்கும்படி உலக சுகாதார நிறுவனம் சீன அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழந்தனர். தற்போது பரவும் இந்த மர்ம நிமோனியாவால் உலக நாடுகள் பீதியில் உள்ளது.
உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகளில் நோய் பரவுவதைக் கண்காணிக்கும் ஒரு நிறுவனமான ProMed சீனாவில் பரவும் இந்த நிமோனியா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோயின் முதல் மற்றும் மிகப்பெரிய அறிகுறி அதிக காய்ச்சல் என்றும் இந்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…