பாலஸ்தீன பகுதியான காசாவை ஹமாஸ் அமைப்பினர் ஆக்கிரமிப்பு இருந்து, மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு மாதங்கள் முடிந்தபோதிலும் இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து, 34 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை இரண்டுகட்டமாக வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், மூன்றாவது கட்டமாக தரை வழி தாக்குதலைத் தொடங்கியது.
அதன்படி, இஸ்ரேல் ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடைய நடக்கும் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும், காசா நகரில் 9 அயிரத்திற்கும் மேலானோரும் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகியது.
இதற்கிடையில் இந்த இரு போரினால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் பல உலக நாடுகள், இரண்டு தரப்பினரிடமும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவில் போர் நிறுத்தம் செய்யும் வலியுறுத்தலை நிராகரித்துள்ளார். இஸ்ரேலின் இந்த முடிவை அமெரிக்காவும் ஆதரித்தது.
ஆனால், சமீபத்தில் இஸ்ரேல் வடக்கு காசாவில் 4 மணிநேர போர் இடைநிறுத்தத்தை செயல்படுத்தத் தொடங்கும் என்று வெள்ளை மாளிகை கூறியது. இந்த அறிவிப்பிற்கு பத்தி அளிக்கும் விதமாக பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், வெள்ளை மாளிகை அறிவித்தபடி மனிதாபிமான அடிப்படையில் தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தத்தில் இஸ்ரேல் ஈடுபடாது. அதற்கு பதிலாக இஸ்ரேலிய படைகள் ஏற்கனவே பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற ஒரு நாளைக்கு பல மணிநேரம் சண்டையை நிறுத்துகின்றன. எங்களுக்குள் சண்டை தொடர்கிறது. பணயக்கைதிகளை விடுவிக்காமல் போர் நிறுத்தம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…