“இங்கு தான்..,” சாவர்க்கர் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பிரதமர் மோடி!

பிரான்ஸ், மார்சே நகருக்கு சென்ற பிரதமர் மோடி, வீர் சாவர்க்கரின் துணிச்சல் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது என அவரது நினைவுகளை பகிர்ந்து அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

modi

பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் நடைபெற்ற பாரிஸ் AI உச்சி  மாநாட்டில் பங்கேற்றார். இந்த உச்சி மாநாட்டில்  பிரதமர் மோடியும் தலைமை தாங்கி உரையாற்றினார் என்பது குறிப்பிட தக்கது.

இந்த நிகழ்வில்,  பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உருசுலா வான் டெர் லேயன், கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாரிஸ் AI உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ” AI சார்புகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். AI தொழில்நுட்பத்தில் கூட்டு அணுகுமுறை தேவை. மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற AI உதவும். AI மூலம் தரமான தரவுத் தொகுப்புகளை உருவாக்க வேண்டும். சைபர் பாதுகாப்பு மற்றும் தவறான தகவல் தொடர்பான சவால்களை நாம் கவனிக்க வேண்டும். AI-யால் புதிய வகையான வேலைகள் உருவாக்கப்படுகின்றன. நமது எதிர்காலத்தை எரிபொருளாகக் கொள்ள பசுமை சக்தி தேவை .” என பேசினார்.

இந்த உச்சி மாநாடு முடிந்த பிறகு பிரான்ஸ், மார்சே நகருக்கு சென்ற பிரதமர் மோடியை அங்குள்ள வெளிநாடு வாழ் இந்திய மக்கள் வரவேற்றனர். தனது மார்சே பயணம் குறித்தும், சாவர்க்கர் குறித்தும் நினைவுகளை பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  ” மார்சேயில் தரையிறங்கியுள்ளேன். இந்தியாவின் சுதந்திரத் தேடலில், இந்த நகரம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. “எனக் குறிப்பிட்டு,

“இங்குதான் வீர சாவர்க்கர் பிரிட்டிஷிடம் இருந்து தைரியமாக தப்பிக்க முயன்றார். அவரை பிரிட்டிஷ் காவலில் ஒப்படைக்கக் கூடாது என்று அப்போது கூறிய மார்சேய் மக்களுக்கும், அன்றைய பிரெஞ்சு ஆர்வலர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வீர் சாவர்க்கரின் துணிச்சல் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது.” என உணர்ச்சிமிகுதியில் பதிட்டிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்