வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி தான் எனது முதல் உரையாடல்! டிரம்ப் நெகிழ்ச்சி!
இந்தியா பிரமிக்க வைக்கும் நாடு எனவும் பிரதமர் மோடி ஒரு உன்னதமான மனிதர் எனவும் டிரம்ப் மோடியிடம் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாஷிங்டன் : கடந்த நவ-5. தேதி அமெரிக்க அதிபர் தேர்தலானது நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 295 மாகாணங்களைக் கைப்பற்றி 2-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் சிறப்பான வெற்றியைப் பெற்ற அவருக்கு உலக முழுவதும் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அதிபராக வெற்றிப் பெற்ற டிரம்ப்புக்கு எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின், தொலைபேசி வாயிலாக டிரம்பை தொடர்பு கொண்ட மோடி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார்.
மேலும், உலக அமைதிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என இரு தலைவர்களும் உறுதி மேற்கொண்டார்கள் என அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், டிரம்ப் பேசுகையில், “உலகமே பிரதமர் மோடியை விரும்புகிறது. இந்தியா ஒரு பிரமிக்க வைக்கும் நாடு. பிரதமர் மோடியையும், இந்தியாவையும் உண்மையான நண்பராக கருதுகிறேன்.
நான் வெற்றி பெற்ற பிறகு முதன்முதலாக பேசிய உலக தலைவர்களில் பிரதமர் மோடியம் ஒருவர்”, என டிரம்ப் மோடியிடம் பேசியதாக அரசியல் வட்டாரங்கள் மூலம் தகவல் தெரியவந்துள்ளது. முன்னதாக வெற்றி பெற்ற பிறகு உரையாற்றிய டிரம்ப், இந்தியா மீதான நட்பு குறித்து பேசி இருந்தார்.
மேலும், பிரதமர் மோடியையும் தாண்டி, பல உலக தலைவர்கள் டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்று 2-வது முறையாக அதிபராக டிரம்ப் பதவி வகிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.