பிரதமர் மோடி அனைவரையும் ஈர்க்கக்கூடியவர்..! பிரான்ஸ் எம்பி ஆன் ஜெனெட்..
பிரதமர் மோடி மிகவும் ஈர்க்கக்கூடியவர் என பிரான்ஸ் எம்பி ஆன் ஜெனெட் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பாரிஸ் சென்றடைந்தார். பாரிஸ் சென்றடைந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே விமான நிலையத்தில் வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் குறித்து பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன் ஜெனெட் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பாஸ்டிலி தினத்தில் இந்திய வீரர்கள் இங்கு வந்திருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. அங்கு பிரதமர் மோடியையும் நான் சந்தித்தேன். முன்பு நான் அவரை 2018 இல் சந்தித்தேன். என்று கூறினார்.
பிரதமர் மோடி அனைவரையும் ஈர்க்கக்கூடியவர், அவருடன் பேசும் மக்களை நம்ப வைக்கும் உறுதியையும் கொண்டவர். இந்த கூட்டாண்மையை பலப்படுத்தப் போகிறோம். நமக்கிடையிலான இணைப்புகளையும் கூட்டாண்மையையும் வலுப்படுத்த வேண்டுமானால், இரு நாடுகளிலும் புலம்பெயர் மக்களை அதிகரிக்க வேண்டும். ஏனென்றால், நாம் ஒருவரையொருவர் நன்கு அறிந்து சிறப்பாக ஒத்துழைக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.