140 கோடி மக்களின் நம்பிக்கை.. இந்தியா மாறுகிறது.! பிரதமர் மோடி பெருமிதம்.!

PM Modi speech in Moscow Russia

மாஸ்கோ: ரஷ்ய பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று ரஷ்யா வாழ் இந்தியர்கள் மத்தியில் தலைநகர் மாஸ்கோவில் உரையாற்றி வருகிறார்.

இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கு இடையான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து இன்று மாஸ்கோவில் வாழும் ரஷ்யா வாழ் இந்தியர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், ‘ இன்று இந்தியா உலகின் மிக நீளமான ரயில் பாலம், உலகின் மிக உயரமான சிலை அமைக்கும் போது, ​​உலகமே இந்தியா மாறுகிறது என கூறுகிறார்கள். இந்தியா தனது 140 கோடி குடிமக்களின் ஆதரவை நம்புகிறது. 140 கோடி இந்தியர்கள் இப்போது ஒரு தீர்மானத்தை எடுத்து இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற விரும்புகிறார்கள். இன்று 140 கோடி இந்தியர்கள் பல தசாப்தங்களாக நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று நம்புகிறார்கள்.

உலகளாவிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க இந்தியாவும் ரஷ்யாவும் தோளோடு தோள் இணைந்து செயல்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு இருக்கும் நீங்கள் அனைவரும் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகளுக்கு பலப்படுத்தி வருகிறீர்கள். உங்கள் கடின உழைப்பு மற்றும் நேர்மையால் ரஷ்ய வளர்ச்சிக்கு பங்களித்துள்ளீர்கள். ரஷ்யா என்ற வார்த்தையைக் கேட்டவுடன், ஒவ்வொரு இந்தியனின் மனதில் தோன்றும் முதல் வார்த்தை, இன்பத்திலும் துக்கத்திலும் இந்தியாவின் பங்குதாரர் என்பதாகும். இந்தியாவின் தோஸ்த் ரஷ்யா.  இரு நாட்டு உறவு எப்போதும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் வலுவான அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா – ரஷ்யா உறவுகளின் வலிமை பலமுறை சோதிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் எங்கள் நட்பு வலுவாக இருந்துள்ளது. இதற்கு எனது அன்பு நண்பரான அதிபர் புதினின் தலைமைத்துவத்தை நான் பாராட்ட விரும்புகிறேன். 2 தசாப்தங்களுக்கும் மேலாக இந்த கூட்டாண்மையை வலுப்படுத்த அவர் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நான் ரஷ்யாவுக்கு வருவது இது 6வது முறையாகும். இந்த ஆண்டுகளில் நாங்கள் ஒருவரையொருவர் 17 முறை சந்தித்தோம். இந்த சந்திப்புகள் அனைத்தும் நம்பிக்கையையும் மரியாதையையும் அதிகரித்துள்ளன. எங்கள் மாணவர்கள் மோதலில் சிக்கியபோது, ​​அவர்களை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவர அதிபர் புதின் எங்களுக்கு உதவினார். ரஷ்யாவின் மக்களுக்கும் எனது நண்பரான அதிபர் புதினுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன்.

உங்கள் அனைவருடனும் சில நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ரஷ்யாவில் கசான் மற்றும் யெகாடெரின்பர்க்கில் புதிய தூதரகங்களைத் திறக்க முடிவு செய்துள்ளோம். இது பயணம் இரு நாட்டு வணிக வர்த்தகத்தை மேம்படுத்தும் என பிரதமர் மோடி மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்வில் ரஷ்யா வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்