அபுதாபியில் மடகாஸ்கர் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி..!

Madagascar

பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினாவுடன்பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு 7-வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த 8 மாதங்களில்  3-வது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.

அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார். இதையடுத்து நேற்று மாலை அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டனர்.

அபுதாபியில் ரூபே சேவையை தொடங்கி வைத்த மோடி – ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது

இந்நிலையில், துபாயில் நடைபெறும் உலக உச்சி மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரே ரஜோலினாவை இன்று சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.

அதில், “இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து அவர்களின் பேச்சுவார்த்தை இருந்ததாகவும், மடகாஸ்கரின் வளர்ச்சிப் பயணத்தில் இந்தியாவின் ஆதரவு இருப்தாக பிரதமர் உறுதியளித்தார்” என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்