பிக்காசோவின் ஓவியம் நியூயார்க்கில் 103 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை..!

Default Image

ஏலத்தில் சக்கைப்போடு போட்ட பப்லோ  பிக்காசோவின் பிரபலமான  ஓவியம்… அமோக விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

கடந்த வியாழக்கிழமை அன்று பிக்காசோவின் ஓவியம் நியூயார்க்கில் 100 மில்லியன் டாலரை தாண்டி விற்பனை செய்யப்பட்டு சாதனைப்படைத்துள்ளது. அந்த ஓவியத்தில் “பெண் ஒருவர் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்திருப்பது” போல் காட்சி படுத்தப்பட்டிருக்கும், அந்த ஓவியம் ஏலத்திற்கு வந்த போது வெறும் 19 நிமிடத்தில் சுமார் 103 மில்லியன் அமெரிக்க டாலரில் விற்கப்பட்டு கலை உலகத்தை வியக்கவைத்துள்ளது.

தற்போது கொரோனா தொற்றுநோய் இருந்தபோதிலும் ஆர்ட் மார்க்கெட்டில் உயிர்ச்சக்தியை இந்த விற்பனை உறுதிப்படுத்துள்ளது. மேலும் 1881 இல் பிறந்து 1973 இல் இறந்த பிக்காசோ ஸ்பானிஷ் ஓவியர்கும் இதில் சிறப்பு அந்தஸ்து உள்ளதை உறுதியாகியுள்ளது.

இதே ஓவியம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் விற்பனையில் 28.6 மில்லியன் பவுண்டுகள் அல்லது சுமார். 44.8 மில்லியனுக்கு வாங்கப்பட்டது, இது வியாழக்கிழமை வழங்கப்பட்ட விலையில் பாதிக்கும் குறைவானது. மேலும் ஸ்பானிஷ் ஓவியரின் ஐந்து படைப்புகள் இப்போது 100 மில்லியன் டாலர் என்ற குறியீட்டு வரம்பைத் தாண்டிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்