பெருவின் அதிபர் பதவிநீக்கம்! முதல் பெண் அதிபராக பதவியேற்கிறார் டினா பொலுவார்டே.!
பெருவின் அதிபர் காஸ்டிலோ பதவி நீக்கம், முதல் பெண் அதிபராகிறார் டினா பொலுவார்டே.
பெரு நாட்டின் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ, காங்கிரஸால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துணை அதிபர் டினா பொலுவார்டே, பெருவின் அடுத்த அதிபராகிறார். காஸ்டிலோ, சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயன்றார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் காஸ்டிலோ, சட்டமன்றத்தை கலைத்து, அரசாங்கத்தை ஒருதலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் துணை அதிபர் டினா பொலுவார்டே, பெரு நாட்டின் வரலாற்றில் முதல் பெண் அதிபராக பதவியேற்க இருக்கிறார். அவர் நாட்டில் ஒற்றுமை அரசாங்கத்தை நடத்துவேன் என்று கூறியுள்ளார்.