இந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இனி விசா தேவையில்லை.. சீனா அறிவிப்பு

free visa

சீனாவில் பருவகால சுவாச நோய் தொற்று தற்போது அதிகரித்துள்ளது. இதனால் சமீபத்திய நாட்களில் சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. ஏனெனில், முன்னர் கொரோனா போல பெருந்தொற்றுகள் சீனாவில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவின.

இதனால் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தொற்று நோய்க்குப் பிறகு சுற்றுலாவுக்கு மேம்படுத்தும் முயற்சியில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் சீன வருவதற்கான விசாவுக்கு விலக்கு அளித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, டிச.1 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை, அந்த நாடுகளின் குடிமக்கள் வணிகம், சுற்றுலா, உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்க்க அல்லது 15 நாட்களுக்கு மேல் பயணம் செய்ய சீனாவிற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக விசா தேவையில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சர்வதேச விமான பாதைகளை மீட்டெடுப்பது உட்பட, மூன்று ஆண்டு கடுமையான கொரோனா நோய்த்தொற்றை தொடர்ந்து, சுற்றுலாத் துறையை புதுப்பிக்க சீனா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இன்றைய உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.! தாய்லாந்தில் RSS தலைவர் பேச்சு.!

கொரோனா தொற்றுநோய், மனித உரிமைகள், தைவான் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் பல மேற்கத்திய நாடுகளுடன் மோதலுக்குப் பிறகு அரசு தனது பிம்பத்தை உலகெங்கிலும் மீண்டும் நிலைநிறுத்தப் பார்க்கிறது. 24 நாடுகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட பியூ ஆராய்ச்சி மையக் கணக்கெடுப்பு, சீனாவின் பார்வைகள் பரந்த அளவில் எதிர்மறையாக இருப்பதாகவும், 67% சாதகமற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் சீனா மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதாகவும், மற்றவர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தற்காலிகமாக விசா தேவையில்லை என சீனா அரசு அறிவித்துள்ளது.

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்.! 30 பேர் உயிரிழப்பு, 100 பேர் காயம்.!

ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இன்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளை சீன அரசாங்கம் செயல்படுத்தும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளது. மேலும், ஐரோப்பிய ஷெங்கன் ஒப்பந்தத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே சீன நாட்டினருக்கு ஜெர்மனிக்கு விசா இல்லாத பயணம் சாத்தியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த மாதம், நார்வேயின் குடிமக்களையும் சேர்த்து 54 நாடுகளுக்கு விசா இல்லாத போக்குவரத்துக் கொள்கையை சீனா விரிவுபடுத்தியது. ஆகஸ்ட் மாதத்தில், உள்வரும் பயணிகளுக்கான அனைத்து கொரோனா சோதனைத் தேவைகளையும் சீனா ரத்து செய்தது. சிங்கப்பூர் மற்றும் புருனே குடிமக்களுக்கு 15 நாள் விசா இல்லாத நுழைவு ஜூலை மாதம் மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்