அமைதி பெரும் லடாக் எல்லை.. புதியதாக மலரும் இந்தியா – சீன உறவு.!

கிழக்கு லடாக் எல்லை பகுதியிலிருந்து இந்தியாவும், சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்ப பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளன.

Ladakh - India -China

லடாக் : கடந்த 4 ஆண்டுகளாக எல்லையில் இந்தியா-சீனா இடையே நிலவி வந்த பதற்றம் தற்போது மெல்ல மெல்ல முடிவுக்கு வருகிறது. அதாவது, கிழக்கு லடாக் பகுதியில் உள்ள டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளிகளில் இந்தியா மற்றும் சீனா இராணுவத்தினர் படைகளை விலக்கி வருகின்றனர்.

இருப்பினும், இரு நாட்டு படைகளும் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்துக்குப் பிறகு, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் (LAC) மீண்டும் ரோந்து பணிகளை மேற்கொள்ள இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், டெப்சாங், டெம்சோக் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளன.

கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 2020 இல் ஏற்பட்ட கடுமையான மோதலுக்குப் பிறகு, இந்தியா – சீனா இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதட்டமாகின. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ரஷ்யாவின் தலைமையில் கசானில் நடைபெற்ற மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அந்த வகையில், இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட விரிசலை தீர்ப்பதற்கான வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தை நடத்திய பின், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த ஒப்பந்தம் எல்லையில் மோதலை முடிவுக்கு வந்ததைக் குறிக்கிறது.

ஆம், பிரிக்ஸ் மாநாட்டில், நடந்த இருதரப்பு சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியா-சீனா ஒப்பந்தத்தை வரவேற்றனர். இதனை தொடர்ந்து, இந்திய வீரர்கள் முறையாக அந்தந்த பகுதிகளில் உள்ள பின்பகுதிகளுக்கு உபகரணங்களைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளனர்.

அதன்படி, டெம்சோக்கில் இருந்து இந்திய வீரர்கள் சார்டிங் நாலாவின் மேற்குப் பகுதியை நோக்கி பின்வாங்குகிறார்கள், அதே நேரம் சீன வீரர்கள் நாலாவின் கிழக்குப் பகுதியை நோக்கி பின்வாங்குகிறார்கள்.

இதுவரை இருபுறமும் சுமார் 12 கூடாரங்கள் அகற்றப்பட தயாராக உள்ளன. மறுபுறம், சீன இராணுவம் டெப்சாங்கில் கூடாரங்கள் அமைக்கவில்லை. ஆனால் அவர்கள் வாகனங்களுக்கு இடையில் தார்பாய் பயன்படுத்தி தற்காலிக தங்குமிடங்களை உருவாக்கியுள்ளனர்.

சீன ராணுவம் அப்பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதுடன், இந்திய ராணுவமும் அங்கிருந்து சில வீரர்களை குறைத்துள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ராணுவ மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் இது பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS TN
BJP State President K Annamalai
shankar game changer
mgr annamalai D. Jayakumar
namassivayam
PMK Leader Anbumani Ramadoss
cm stalin fisherman