லேமினேஷன் பேப்பர் தீர்ந்ததால் பாஸ்போர்ட்டை நிறுத்திய பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் மாவு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய உணவு தானியங்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது  என்ன பற்றாக்குறை என்பதை தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பாகிஸ்தானில் பாஸ்போர்ட் அச்சடிக்கப்படுவதில்லை. லேமினேஷன் பேப்பர் தட்டுப்பாடுதான் இதற்குக் காரணம். இந்தத் தகவலை பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்த செய்தி தற்போது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகி வருகிறது. மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அரசு இது குறித்து மவுனம் காக்கிறது.

நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும்:

பாகிஸ்தானின் குடிவரவு மற்றும் பாஸ்போர்ட் இயக்குநரகம் (டிஜிஐபி) படி, பாஸ்போர்ட்டில் பயன்படுத்தப்படும் லேமினேஷன் காகிதம் பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் பணிபுரியும் டிஜிஐபி இன் ஊடகப் பிரிவின் தலைமை இயக்குநர் காதர் யார் திவானா கூறுகையில், “நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்து வருவதாகக் கூறினார். நிலைமை விரைவில் கட்டுக்குள் வரும் மற்றும் பாஸ்போர்ட் வழங்குவது வழக்கம் போல் தொடரும்” என்று திவானா கூறியதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.

குடிமக்கள், மாணவர்களின் கனவுகள் சிதைந்தன:

லேமினேஷன் பேப்பர் பற்றாக்குறையால் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ள ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான காலக்கெடு நெருங்குவதால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடிக்கு பாகிஸ்தான் அரசின் திறமையின்மையே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெஷாவரைச் சேர்ந்த மாணவி ஹிரா இத்தாலிக்கான தனது மாணவர் விசா சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும், அடுத்த மாதம் தான் சேர இருப்பதாகவும் கூறினார். ஆனால் பாஸ்போர்ட் இல்லாததால் எனது வாய்ப்பும் பறிபோனது என்றார். பாகிஸ்தான் அரசு திறமையின்மைக்கு விலை கொடுக்க வேண்டியுள்ளது. தங்களுக்கு இழைக்கும் அநீதியாகும் என மாணவி ஹிரா கூறினார்.

2013-லும் பிரச்சனை வந்தது:

இதற்கிடையில், பெஷாவரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 3000 முதல் 4000 பாஸ்போர்ட்டுகளை வந்த நிலையில்  ​​​​தற்போது தினமும் 12 முதல் 13 பாஸ்போர்ட்களை மட்டுமே அச்சிட முடிகிறது. பாகிஸ்தானில் அச்சிடப்படாத பாஸ்போர்ட்டுகள் சுமார் 7 லட்சம் தேக்கிவைக்கப்பட்டுள்ளதாகவும், லேமினேஷன் பேப்பர் கிடைத்தவுடன், இழந்த நேரத்தை ஈடுசெய்ய வார இறுதி நாட்களிலும் அச்சிடுதல் தொடரும் என்றும் கூறினார்.

இருப்பினும், பாகிஸ்தானில் இதுபோன்ற நெருக்கடி ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2013 ஆம் ஆண்டில், அச்சுப்பொறிகள் மற்றும் லேமினேஷன் பேப்பர்களின் பற்றாக்குறை காரணமாக  பாஸ்போர்ட் அச்சிடுதல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்