225 தொகுதிகளை கொண்ட இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் தொடக்கம்.!
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் திசநாயக கட்சி NPP பெரும்பான்மையை வெல்லும் என அரசியல் ஆர்வளர்கள் கணித்துள்ளனர்.
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை வாக்குப்பதிவு செய்யப்படும், சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றார்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் 21 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி களமிறங்குகிறது. மேலும், ராஜபக்சேக்களின் இலங்கை பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.
அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் 5,464 வேட்பாளர்கள், சுயேச்சைகள் 3,357 பேர் என மொத்தம் 8,888 பேர் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், அதிபர் தேர்தலில் வென்ற கட்சிகளே இந்தத் தேர்தலிலும் வெற்றிபெற்றுள்ளன.
இதனால், இந்த முறையும் திசநாயக கட்சி NPP வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் வெற்றி பெற ஒரு கட்சி 113 இடங்களைப் பெற வேண்டும். இந்தியாவை போலவே, தேர்தல் அன்று நேரில் வாக்களிக்க முடியாத பொலிஸ், இராணுவம் மற்றும் அரசு பணி புரிபவர்கள் தபால் மூலம் வாக்களிக்கின்றனர்.
22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 17 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் என இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு மொத்தம் 13,421 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஓரிரு நாட்களில் முடிவு தெரியவரும். கடந்த 2020ல் வாக்குப்பதிவு முடிந்த இரண்டு நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக மொத்தம் 2,034 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.