நாடாளுமன்ற தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு சீனா வாழ்த்து!

Default Image

மக்களவை தேர்தல் : 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, பாஜக 240 இடங்களை வென்றதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி, தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மோடிக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, இந்தியாவுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை, “இரு நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டும், எதிர்காலத்தை மனதில் வைத்தும், இருநாடுகளுக்கு இடையான உறவை மேம்படுத்த விரும்புவதாக” கூறியுள்ளது.

முன்னதாக, மாலத்தீவு, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் இஸ்ரேல், உக்ரைன், இத்தாலி, ஜமைக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kallazhagar - Madurai
Ramadoss
retro karthik subbaraj
narendra modi ind vs pak war
modi and rajinikanth
Rajnath Singh