‘பேஸ் அப்’ மூலமாக 18 வருடங்கள் கழித்து காணாமல் போன மகனை கண்டு பிடித்த பெற்றோர் !
தற்போதிய கால காலத்தில் அனைத்து மக்களிடமும் செல்போன் என்பது தங்களின் மூன்றாவது கைபோல உள்ளது. செல்போனில் பயன்படுத்தபடும் அப்ளிகேஷன்களில் , வாட்ஸ் ஆப் , இன்ஸ்ட்ராகிராம் , பேஸ் புக் ,போன்ற அப்ளிகேஷன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது ட்ரெண்டிங் ஆகிவரும் அப்ளிகேஷன்களில்‘பேஸ் அப்’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் நமது தற்போதைய புகைப்படத்தை வைத்து வயதானால் எப்படி இருப்போம்? சிறுவயதில் எப்படி இருந்தோம்? என்பதை பார்ப்பதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி தனிநபர் புகைப்படத்தை சேகரித்து வைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி சீனாவில் 18 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்லேன் நகரை சேர்ந்த லீ என்பவரின் மகன் யு வீபெங் 3 வயதா க இருக்கும் போது இவர் கடந்த 2001-ம் ஆண்டு மே மாதம்காணாமல் போனார் . பிறகு யு வீபெங் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். போலீசார் பல நாள்களாக விசாரணை நடத்தியும் அந்த சிறுவன் கண்டுபிடிக்க முடியவில்லை.
தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள பேஸ் ஆப் மூலம் கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இதை தொடர்ந்து யு வீபெங் சிறுவயது புகைப்படத்தை கொண்டு தற்போது வயதுக்கு எப்படி இருப்பார் என எண்ணி அதற்கு எற்ப புகைப்படத்தை மாற்றினர்.
மாற்றிய புகைப்படங்கள் வைத்து போலீசார் உதவியுடன் பெற்றோர்கள் தங்கள் மகனை தேடி வந்தனர்.அப்போது கவுங்சோ மாகாணத்தில் படித்து வரும் ஒரு மாணவரின் முகத்துடன் அப்புகைப்படம் ஒத்துப்போனது.
பின்னர் அந்த மாணவனிடம் போலீசார் விவரத்தை எடுத்து கூறினர்.பிறகு யு வீபெங்கிற்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்தனர்.பரிசோதனையில் காணாமல் போன யு வீபெங் என்பது தெரியவந்தது. இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது குடும்பத்துடன் இணைத்து உள்ளார்.