Gaza: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் ஓய்ந்தபாடில்லை. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். அமெரிக்கா, ஜோர்டான், எகிப்து, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகியவை சமீப நாட்களாக காசாவிற்கு உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், விமானம் மூலம் காசாவிற்கு நிவாரண உதவிகளை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார்.
அதன்படி, அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்கா ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகித்து வருகிறது. இந்த நிலையில், உணவுப் பொட்டலங்கள் அடங்கிய பெட்டியை கீழே போடும்போது பாராசூட் திறக்காமல், கீழே கூடியிருந்த மக்களின் மேல் விழுந்தது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, அமெரிக்காவின் அலட்சியத்தால் உயிர் பலி ஏற்பட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
2.3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட காசாவின் கால் பகுதி பஞ்சத்தில் இருப்பதாகவும், குழந்தைகள் பட்டினியால் இறப்பதாகவும் ஐ.நா. மேற்கோள் காட்டியுள்ளது. இதனிடையே, காசாவில் 30,800 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக ஹமாஸ் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…