இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 5-வது நாளாக போர் தீவிரமடைந்து உள்ளது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் தரப்பும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதுவரை ஹமாஸ் – இஸ்ரேல் தாக்குதலில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3000-ஐ கடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது, இஸ்ரேல் ராணுவமானது அமெரிக்கா உதவியுடன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் காசாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.
இஸ்ரேல் ராணுவம் காசா மீது நேற்று தொடங்கிய வான்வழி தாக்குதல் 24 மணிநேரமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் குழு இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காசா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும், பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் பாலஸ்தீன மக்களுக்கான சர்வதேச பாதுகாப்பு முறையை செயல்படுத்துவதற்கான கோரிக்கையையும் முன் வைத்துள்ளது .
மேலும், அரசு மற்றும் தூதரக ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு, 24 மணி நேரமும் பணியாற்ற பாலஸ்தீன அரசு உத்தரவு விட்டுள்ளது. இதற்கிடையில், பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் படையினர் காசா பகுதியில் தொடர் தாக்குதலில் ஈடுப்பட்டு வருவதால் அங்கிருந்து சுமார் 2.5 லட்சம் பாலஸ்தீன மக்கள் காசா எல்லை பகுதியில் இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…