பிப்.11ல் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் – அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

pakisthan election

2024ம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் தேதியை அறிவிக்கக் கோரி தொடர்ந்து முறையீடுகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப். 11ல் பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை போன்று பாகிஸ்தானிலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, பாகிஸ்தானில் கடந்த 2018ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. அதில், பாகிஸ்தானில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது.

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதலில் 195 பேர் பலி – ஹமாஸ் தகவல்!

இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் செயல்பட்டார்.பாகிஸ்தானில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடியால் இம்ரான் கான் அரசு மீது கடந்த 2022 ஏப்ரலில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்து, ஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைமையில் அரசு பொறுப்பேற்றது.

பாகிஸ்தான் பிரதமராக அக்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் செயல்பட்டு வந்தார். இந்த சமயத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டது. அதாவது, கடந்த ஆக.9ம் தேதி இரவோடு இரவாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் ஆலோசனையின் பேரில், திடீரென அந்நாட்டு நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டது. இதனால், பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தப்பட உள்ளதாக அப்போதே கூறப்பட்டது.

பாதி எரிந்த நிலையில் விடுதி அருகே உடல்.! ஜார்கண்டில் உயிரிழந்த தமிழக மாணவர்.!

பாகிஸ்தானில் 2024 ஜனவரி மாதம் 4-வது வாரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் தேதியை அறிவிக்கக் கோரி தொடர்ந்து முறையீட்டு வந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி) வியாழக்கிழமை அறிவித்தது.

சரியான நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற மனுக்கள் மீதான விசாரணையின் போது, தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் இன்று பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் ஆலோசகர் சஜீல் ஸ்வாதி கூறுகையில், ஜனவரி 29-ம் தேதிக்குள் தொகுதிகள் வரையறை பணி முடிவடைந்து, தேர்தல் நடத்தப்படும் என்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்