இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கரே தொய்பயன் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக இந்திய அதிகாரிகள் முன்னதாகவே சந்தேகமடைந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உதாரணமாக, பாகிஸ்தான் ஆதரவு கருத்துக்களையும், தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துக்களையும் தெரிவித்ததாக கூறி 16 யூ-டியூப் சேனல்களை மத்திய அரசு இந்தியாவில் முடக்கியுள்ளது. இந்த சூழலில், இந்தியா உடனடியாக தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் ” நாங்கள் எங்களுடைய எல்லையில் எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் சில முக்கிய முடிவுகள் அவசியமாக உள்ளன. அதனால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் இந்தியாவிடமிருந்து தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் அரசுக்கு தகவல் அளித்துள்ளது. அவர்களின் தாக்குதல் விரைவில் நடைபெறலாம். எனவே, பாகிஸ்தான் மிகுந்த விழிப்புணர்வுடன் உள்ளது. எங்கள் நாட்டுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்.” எனவும் கவாஜா முகமது ஆசிஃப் பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025