இந்திய வான் எல்லைக்குள் 10 நிமிடங்கள் பறந்த பாகிஸ்தான் விமானம்.! நடந்தது என்ன?

Pakistan airline flight

இந்தியா வான்வெளியில் 10 நிமிடங்களுக்கும் மேலாக பாகிஸ்தான் ராணுவ விமானம் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கனமழை காரணமாக லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் போனதால், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானம் இந்திய வான்வெளியில் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பறந்தும் இந்திய விமானப்படை எந்தவித நடவெடிக்கையும் எடுக்கவில்லை.

புல்வாமா தாக்குதல்:

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு வாகனங்களில் சென்று கொண்டிருந்த 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் உறவு:

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர், இரு நாட்டு நல்லுறவு சிறிது மோசமடைந்து உள்ளது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் தங்கள் வான்வெளி தடங்களை பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானம் மே 4 அன்று 10 நிமிடங்கள் சுற்றி திரிந்ததாக ஒரு ஊடக அறிக்கை வெளியாகியுள்ளது.

என்ன நடந்தது:

மே 4 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மஸ்கட்டில் இருந்து திரும்பிய PIA விமானம் PK248, கனமழை காரணமாக லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தவறியதாக கூறப்படுகிறது. அந்த விமானி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றார், ஆனால் போயிங் 777 விமானம் நிலையற்ற காரணமாக தரையிறங்க முடியவில்லை.

பின்னர், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் அறிவுறுத்தலின் பேரில், வானில் சுற்றி திரிய தொடங்கினார் பைலட். அப்போது, கனமழை மற்றும் குறைந்த உயரம் காரணமாக வழி தவறி, மணிக்கு 292 கிமீ வேகத்தில் 13,500 அடி உயரத்தில் பறந்த பாகிஸ்தான் விமானம், பதானா காவல் நிலையத்திலிருந்து இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது.

இந்திய பஞ்சாபில் உள்ள தரன் சாஹிப் மற்றும் ரசூல்பூர் நகரங்கள் வழியாக 40 கிலோமீட்டர் பயணம் செய்த பிறகு விமானம் நௌஷேஹ்ரா பண்ணுவானில் இருந்து திரும்பியது. இந்திய வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போ து, பைலட் விமானத்தை 20,000 அடி உயரத்திற்கு கொண்டு சென்றார், விமானம் இந்திய வான்வெளியில் ஏழு நிமிடங்கள் பறந்தது. பின்னர், இந்திய பஞ்சாபில் உள்ள ஜாகியன் நூர் முஹம்மது கிராமத்திற்கு அருகில் இருந்து விமானம் மீண்டும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்தது.

ஆனால், அந்த பாகிஸ்தான் விமானம் பஞ்சாபின் கசூர் மாவட்டத்தில் உள்ள டோனா மபோகி, சாந்த், துப்சாரி கசூர் மற்றும் காதி கலஞ்சர் கிராமங்கள் வழியாக இந்திய வான்வெளிக்குள் மீண்டும் நுழைந்தது. மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, விமானம் இந்திய பஞ்சாபில் உள்ள லகா சிங்வாலா ஹிதர் கிராமத்தில் இருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் மீண்டும் நுழைந்தது. அப்போது விமானம் 23,000 அடி உயரத்தில் 320 கி.மீ. தூரத்தில் பறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய எல்லைக்குள் சுமார் 10 நிமிடங்கள் பறந்தும் இந்திய விமானப்படை எந்தவித நடவெடிக்கையும் எடுக்கவில்லை எனபது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்