பாகிஸ்தான் பத்திரிகையாளர் கென்யாவில் போலீசால் சுட்டுக்கொலை.!

Default Image

பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷத் ஷெரிப், கென்ய போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

50 வயதான அர்ஷத் ஷெரிப், பாகிஸ்தானின் ராணுவத்தை விமர்சித்த காரணத்துக்காக கைது செய்யப்படுவதை தவிர்க்க பாகிஸ்தானை விட்டு வெளியேறி கென்யாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

அர்ஷத் ஷெரிப், தனது சகோதரர் குர்ரம் அகமதுவுடன் காரில் சென்றுகொண்டிருந்த போது நைரோபி-மகடி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசை மீறி வேகமாக சென்றதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அர்ஷத் ஷெரிப், தலையில் குண்டு பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

போலீசார் இது குறித்து கூறும்போது, குழந்தை கடத்தல் வழக்கில் இதே போன்ற காரை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம், அந்த சமயம் ஷெரிப் சாலைத் தடுப்பையும் மீறி வேகமாக சென்றதால் இது தவறுதலாக நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது இறப்பு குறித்து ஷெரிப் உண்மைக்கான பரிசை தற்போது பெற்றுள்ளார், என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி மற்றும் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்