பாகிஸ்தான் ரயிலில் குண்டுவெடிப்பு – 2 பேர் பலி, 8 பேர் காயம்!

Default Image

பாகிஸ்தானில் ரயிலில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழப்பு, 8 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்.

பாகிஸ்தான் ரயிலில் குண்டுவெடிப்பு:

jaffer16

பாகிஸ்தானில் இன்று காலை ரயிலில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று நெஞ்சை பதற வைக்கும் செய்தி வெளியாகியுள்ளது. பலுசிஸ்தானில் உள்ள குவெட்டாவுக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் ஜாபர் எக்ஸ்பிரஸ்:

je16

பெஷாவரில் இருந்து குவெட்டா நோக்கிச் செல்லும் ஜாபர் எக்ஸ்பிரஸ் சிச்சாவட்னி ரயில் நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எகானமி வகுப்பின் எண் 6ல் குண்டுவெடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம்:

Jaffar Express

ஜாஃபர் எக்ஸ்பிரஸில் இது இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம், இந்த ரயிலில் இதுபோன்ற ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, இதில் 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் ஜாபர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்