ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி!
பாகிஸ்தான் நாட்டின் மீது கடந்த செவ்வாய் இரவு ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இன்று எதிர் தாக்குதலை நடத்தியிருக்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, பாகிஸ்தான், ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது.
தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் – அல் – அட்ல் மீது இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக ஈரான் கூறியது. மேலும், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் நேற்று கூறியது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் இந்த தாக்குதலை, சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கொள்கைகளுக்கு முரணானது என்று கூறியுள்ளது. மேலும், ஈரானின் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை குறைத்துவிட்டன.
குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லா இளம் தலைமுறை.! சீனாவில் சரியும் மக்கள் தொகை.!
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி, ஈரானிய வெளியுறவு அமைச்சரிடம், இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை கடுமையாக பாதித்துள்ளது என்று கூறியுள்ளார்.