அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கிறது பாகிஸ்தான்..! வெளியாகிய தகவல்..!
பாகிஸ்தானில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் அந்நியச் செலாவணி கையிருப்பு சமீப ஆண்டுகளாக குறைந்து வருவதால் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த நிலையை சரி செய்ய முதற்கட்டமாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அமைத்த தேசிய சிக்கனக் குழு (என்ஏசி) அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10 சதவீதம் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது.
மேலும் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்து அமைச்சகங்களின் செலவினங்களை 15% குறைப்பது குறித்தும் குழு ஆலோசனை வருகிறது. இந்த பரிந்துரைகள் முடிவு செய்யப்பட்டு இறுதியாக பிரதமர் ஷெஹ்பாஸுக்கு அனுப்பப்படும்.