பாகிஸ்தான் இன்னும் பிச்சை பாத்திரத்தை ஏந்தி கொண்டு இருக்கிறது.! பிரதமர் வேதனை.!
நம்மை விட சிறிய நாடுகள் கூட நம்மை விட பெரிய பொருளாதாரத்தை பெற்றுள்ளன. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கழித்தும் இன்னும் பிச்சை பாத்திரத்தை பாகிஸ்தான் ஏந்துகிறது வருத்தமளிக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் அங்குள்ள அரசியல் கூட்டத்தில் பேசியிருந்தாராம்.
நமது அண்டை நட்பு நாடான பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அண்மையில் பேசியதாக வெளியான செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் ஒரு அரசியல் கூட்டத்தில் பேசுகையில், ‘ பாகிஸ்தான் நாடு மிகவும் மோசமான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. மற்ற நாட்டு தலைவர்களை சென்று பார்க்கையிலோ, அல்லது மற்ற நாட்டு தலைவர்களை தொடர்பு கொண்டு பேசுகையிலோ, நாம் எதோ நிதி உதவி கேட்க தான் தொடர்பு கொண்டுள்ளளோம் என நினைத்து கொள்கிறார்கள் .
நம்மை விட சிறிய நாடுகள் கூட நம்மை விட பெரிய பொருளாதாரத்தை பெற்றுள்ளன. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கழித்தும் இன்னும் பிச்சை பாத்திரத்தை பாகிஸ்தான் ஏந்துகிறது வருத்தமளிக்கிறது.’ என மன வேதனையுடன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார் என்று பாகிஸ்தான் ஊடகம் செய்தி தகவல் தெரிவித்துள்ளது.