பரபரக்கும் பாகிஸ்தான் அரசியல் களம்.! சிறையில் இம்ரான் கான்.! பெருகும் ஆதரவு….

Imran khan - Nawaz sharif

பாகிஸ்தான்  நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலை திரைப்படத்தை மிஞ்சும் வகையில் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது. முன்னதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார்.  அவர் தலைவராக உள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பேட் சின்னம் கூட தேர்தல் ஆணையத்தால் முடக்கபட்டுள்ளது.

இதனால் இம்ரான் கான் வேட்பாளர்கள் பல்வேறு சின்னங்களிலும், சுயேட்சையாகவும் தேர்தலை சந்தித்தனர். முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப், ஷெபாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்,  பாகிஸ்தான் மக்கள் கட்சி,  முத்தாஹிதா குவாமி இயக்கம் ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தலை சந்தித்தனர்.

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்.!

மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நிறைவடைந்து. இதனை அடுத்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆரம்பம் முதலே சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பொதுவான சின்னம் இன்றி, சுயேட்ச்சையாக நின்று கூட பெரும்பான்மையான இடங்களில் முன்னணி வகித்து வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அதனை இன்னும் பாகிஸ்தான் அரசு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது.

இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் சுயேச்சை உட்பட மொத்தம் 154 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அடுத்து, பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சிகள் தலா 47 இடங்களில் முன்னிலையில் வகித்து வருகிறது என்றும்,  முத்தாஹிதா குவாமி இயக்கம் 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் 12 இடங்களுக்கு மட்டுமே இதுவரை அதிகாரபூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 5 இடங்களில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தொகுதி வெற்றி நிலவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என இம்ரான் கான் ஆதரவாளர்கள் அரசை குற்றம் சாட்டி வருகின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு பொதுவான தேர்தல் நடைபெற்றது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்