“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!
பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்தினால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் பரபரப்பாக பேசியிருக்கிறார்.

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாசி, இந்தியாவை அணு ஆயுதம் மூலம் தாக்குவோம் என்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார்.
ராவல்பிண்டியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹனிஃப் அப்பாசி, ”பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்தினால், தகுந்த பதிலடி கொடுப்போம். பாகிஸ்தான் ரயில்வே எப்போதும் ராணுவத்திற்கு உதவ தயாராக உள்ளது என்றும், எந்த நேரத்திலும் இந்த உதவியைப் பெறலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
எங்கள் ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவை நோக்கியே உள்ளன. இந்தியா ஏதேனும் துணிச்சலான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தால், அதற்கு தக்க பதிலடி வேண்டியிருக்கும். உலகின் மிக சக்திவாய்ந்த அணுகுண்டு எங்களிடம் உள்ளது. கோரி, ஷாஹீன், கஸ்னவி போன்ற ஏவுகணைகளையும் 130 அணுகுண்டுகளையும் இந்தியாவுக்காக மட்டுமே நாங்கள் வைத்திருக்கிறோம்.
இராஜதந்திர முயற்சிகளுடன், எங்கள் எல்லைகளைப் பாதுகாக்க முழு தயாரிப்புகளையும் நாங்கள் செய்துள்ளோம். நம்மிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், நம்மிடம் உள்ள ஏவுகணைகள், அவை காட்சிக்கு இல்லை. நாடு முழுவதும் நம் அணு ஆயுதங்களை எங்கு வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் சொல்கிறேன், இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் அனைத்தும் உங்களை குறிவைக்கின்றன” என்று அவர் எச்சரித்தார்.