“அடுத்த 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்” – பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு.!
ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் இந்தியாவை எச்சரித்துள்ளது.

இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்தது. அதன் வரிசையில், சிந்து நதியின் நீர் நிறுத்தப்பட்டது, பாகிஸ்தானும் விசாக்களை ரத்து செய்வது உட்பட இப்படி இந்தியா கடினமான முடிவுகளை ஒவ்வொன்றாக எடுத்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், முப்படை அதிகாரிகளுடன் நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதன்படி, பதிலடி தருவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள முப்படைகளுக்கு முழு சுதந்திரம் தருவதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்நிலையில், மோடியின் முக்கிய கூட்டத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் எச்சரிக்கையாக இருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், நம்பகமான உளவுத்துறைகளிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, ”அடுத்த 36 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராகி வருவதாகக் குறிப்பிடுகின்றன.
இந்திய ராணுவத்தால் 24-36 மணி நேரத்திற்குள் ஏதாவது செய்ய முடியும் என்று அவர் கூறினார். இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால், பாகிஸ்தானும் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது” என்று அவர் கூறினார்.
பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த வேதனையின் வலியை பாகிஸ்தான் உண்மையிலேயே புரிந்துகொள்கிறது. இந்த தாக்குதலுக்கு கண்டித்து வருவதாகவும், இஸ்லாமாபாத் ஒரு நடுநிலை நிபுணர்கள் குழுவால் “நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான” விசாரணையை வழங்க முன்வந்ததாகவும், இந்தியா விசாரணையைத் தவிர்த்து மோதல் பாதையைத் தேர்ந்தெடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025