இந்தியாவிற்கு வழங்கும் சலுகை விலைக்கு கோரிக்கை வைத்த பாகிஸ்தான்! மறுத்த ரஷ்யா.!
பாகிஸ்தானுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் தரமுடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடையை விதித்தது, இதனால் ரஷ்யா தனது எண்ணெய் வணிகத்தை ஆசிய நாடுகளுக்கு வழங்க தொடங்கியது. ரஷ்யாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வரும் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை மலிவான விலையில் வாங்கிவருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் விலையை இந்தியாவிற்கு வழங்கும் சலுகை விலையில் தரும்படி கோரிக்கை விடுத்தது, ஆனால் ரஷ்யா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.