பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இன்று 8 மணி அளவில் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள, பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று 2 குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் நேற்று வரை 25 பேர் பலியாகி இருந்தார்கள் என வெளிவந்தது. ஆனால் தற்போது பலி எணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் 42 பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பானது பிஷின் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் அலுவலகத்திற்கு வெளியே வெடித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என நேற்று தகவல் வெளியாகி இருந்தது.
5 சம்மன்களை புறக்கணித்தது ஏன்.? கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சரமாரி கேள்வி.!
அடுத்ததாக, கில்லா அப்துல்லா பகுதியில் உள்ள பாகிஸ்தான் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது, இதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர் என நேற்று தகவல் வெளியாகி இருந்தனர். குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த பலர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றய நிலவரமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது இந்த பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த இரட்டை குண்டுவெடிப்பு பற்றி பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கூறுகையில், வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்கள் செல்வதைத் தடுக்க, பயங்கரவாதிகள் தேர்தல் வேட்பாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.
ஆனால் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் பணியாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றும், இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறி இருந்தார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…