பாகிஸ்தானில் பயங்கரம்…. காவல் நிலையத்தில் குண்டு வெடித்து 13 பேர் பலி.!

பாகிஸ்தான் காவல்நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 12 போலீஸார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் ஸ்வாட் எனும் பகுதியில் உள்ள (CTD) காவல்நிலையத்தில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததில் காவல்நிலையமே தரைமட்டம் ஆனதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து குண்டு வெடிப்பில் 12 போலீஸார் பரிதாபமாக உயிரிழப்பு, 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தற்கொலைப்படை தாக்குதல் அல்ல என்று கூறிய போலீஸார், மாகாணம் முழுவதும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வெடிகுண்டு செயலிழக்கப் படையினர் குண்டு வெடித்த இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.