கடந்த 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட இம்ரான் கான், தற்போது ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார் . இந்த வேளையில், அவர் பிரதமர் பதவி வகித்த நேரத்தில் பதியப்பட்ட 2 வழக்குகளில் நேற்றும் இன்றும் அடுத்தடுத்து சிறை தண்டனை தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியல்.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?
நேற்று, அரசு ரகசியங்களை பொதுவெளியில் வெளியிட்டதாக கூறி இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டில் இம்ரான் கான் பதவியில் இருந்த போது, தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க சர்வதேச அளவில் சதிவேலைகள் நடக்கிறது. என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் உங்கள் குற்றங்கள் நீக்கப்படும் என ஒரு சர்வதேச நாடு கூறியுள்ளது என பொதுவெளியில் கூறினார்.
அந்த சமயம் தான், பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர், பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்ரான் கான் குற்றசாட்டை அப்போதே அமெரிக்கா மறுத்து இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தான் , பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அரசு ரகசியங்களை பொது வெளியில் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், அரசு ரகசியங்களை பொதுவெளியில் கூறியது உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கூறப்பட்டது.
இதனை அடுத்து இன்றும் அரசு கருவூலம் தொடர்பான தோஷகானா வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில், இம்ரான் கான் பிரதமர் பொறுப்பில் இருந்த காலத்தில் பிரதமருக்கு வழங்கப்பட்ட அரசு பரிசு பொருட்களை மறைத்து அதனை விற்றதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று வெளியான தீர்ப்பில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் குற்றவாளி என்றும், அவர்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் நீதிபதி முகமது பஷீர் தீர்ப்பளித்துள்ளார். மேலும், 78.7 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…