US தேர்தல் 2024 : அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தடுமாறி வருவதால் கமலா ஹாரிஸை வேட்பாளராக மாற்ற குரல்கள் எழுகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக மீண்டும் களமிறங்குகிறார். குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்குகிறார். ஜனநாயக கட்சியின் துணை அதிபராக ஆசிய வம்சாவளியை சேர்ந்த […]
பெரு : கடந்த 2002ம் ஆண்டு பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேறும் வீரர் வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் 22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்துள்ளது. ஆண்டஸ் மலையில் புதைந்த வில்லியமின் உடல் முழுவதும் பனிக்கட்டியால் உறைந்ததால் இயற்கையாக பதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பனி உருகியதால், அவரின் உடைமைகளுடன் இருந்த பாஸ்போர்ட்டை வைத்து வில்லியமை அடையாளம் கண்டுள்ளனர். வில்லியம் ஸ்டாம்ப்லின் உடல் கடல் மட்டத்திலிருந்து 5,200 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு முகாமுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. தென் அமெரிக்காவின் தெற்கு முனையிலிருந்து […]
நிலநடுக்கம் : இந்திய பெருங்கடலில் திடீரென தென்னாப்பிரிக்காவிற்கு அருகே 6.7 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து சுமார் 2,216 கி.மீட்டர் தூரத்தில் இந்திய பெருங்கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இன்று காலை 10.25 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி இருந்தது. ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, அதிகாரிகளால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை […]
வியன்னா: ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள இசைகலைஞர்கள் வந்தே மாதரம் இசைத்து வரவேற்றனர். பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். முன்னதாக ரஷ்யாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு சென்றுள்ளார். 1983ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி ஆஸ்திரியா நாட்டிற்கு சென்ற பிறகு 41 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் ஒருவர் தற்போது தான் ஆஸ்திரியா […]
சீனாவில் வினோதம்: பறவையின் எச்சில் நிறைந்த கூட்டை வைத்து தயாரிக்கப்படும் சூப்-ஐ சுவைக்க சீன மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு சிறிய சீன பறவையான ஸ்விஃப்ட்லெட்டின் கூடுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த சூப், சரும பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எனவும், இது குறித்து சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சமூக வலைதளத்தின் ஆதிக்கத்தால், பறவை எச்சில் சூப், உலகம் முழுவதும் அறியப்பட்டு, […]
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பில் பிரதமர் மோடி பேசுகையில், பயங்கரவாதத்தின் வேதனை என்பதை என்னால் உணர முடிகிறது என கூறினார். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற பிரதமர் மோடியை ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். அடுத்து நேற்று இரவு ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது சில முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, ரஷ்ய ராணுவத்தில் […]
உக்ரைன்: பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2022, பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை அவ்வபோது நிகழ்த்தி வருகிறது. நேற்று கூட, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உட்பட முக்கிய 5 நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கீவ் நகரில் உள்ள […]
மாஸ்கோ: ரஷ்ய பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று ரஷ்யா வாழ் இந்தியர்கள் மத்தியில் தலைநகர் மாஸ்கோவில் உரையாற்றி வருகிறார். இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கு இடையான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து இன்று மாஸ்கோவில் வாழும் ரஷ்யா வாழ் இந்தியர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் மோடி […]
ரஷ்யா தாக்குதல் : உக்ரைன் தலைநகர் கீவில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், 170-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 800 நாள்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. சொல்லப்போனால், கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நேற்றைய தினம் பட்டப்பகலில் உக்ரைன் […]
மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு சென்றுள்ளார். நேற்றும் இன்றும் ரஷ்யாவில் நடைபெறும் நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வருகிறார். நேற்று ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். மாஸ்கோவில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று […]
சிங்கப்பூர் : வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்குச் சிங்கப்பூரில் உள்ள உணவுக் கழகம் (SFA) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மாதிரியான உணவு வகைகள் ஹாங்காங் மற்றும் தாய்லாந்தில் ரோடு கடைகளில் மிகவும் பிரபலமாக விற்கப்படுகிறது. தற்பொழுது, அந்த பூச்சியினங்களை உணவாக உட்கொள்ள சிங்கப்பூரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பூச்சி இனங்களை சீன மற்றும் இந்திய உணவுகள் உட்பட உலகளாவிய உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ள ஹோட்டல்களின் மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பூச்சிகளில் சிள்வண்டுகள், […]
ரஷ்யா : 2 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. அங்கு ரஷ்யா அதிபர் புதினின் வரவேற்புக்கு பதிலளித்து பேசி இருக்கிறார். ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோ புறப்பட்டு சென்றார். அங்கு விமான நிலையம் சென்றடைந்த மோடியை, ரஷ்யா நாட்டின் மூத்த துணைப் பிரதமரான டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். […]
கென்யா : மனிதர்களைப் போலவே யானைகளும் மற்ற யானைகளை பெயர் சொல்லி அழைப்பதாக கென்ய நாட்டின் ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஆம், மனிதர்கள் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை வைத்திருப்போம், அதேபோல் யானைகள் மற்ற யானைகளை அடையாளம் காணவும் அழைக்கவும் பெயர்களைப் போலவே செயல்படும் குறிப்பிட்ட குரல்களைப் பயன்படுத்துகின்றன. கென்யாவில் உள்ள ஆப்பிரிக்க சவன்னா யானைகளைக் கண்காணிக்கும் கொலராடோ ஸ்டேட் யுனிவர்சிட்டி (யுஎஸ்) டேவிட் மைக்கேல் பார்டோ, கர்ட் ஃப்ரிஸ்ட்ரப் மற்றும் ஜார்ஜ் விட்டெமியர் ஆராய்ச்சியாளர்களால் இந்த […]
அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட முதல் 3டி2- போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் போட்டியில் அபிஷேக் சர்மா டக்-அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். வெறும் 46 பந்துக்கு 100 ரன்கள் எடுத்து அசத்தினார், அதில் 8 […]
UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டன. இதில் 14 வருட கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்து, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொழிலாளர் கட்சிக்கு மக்கள் பிரிட்டனை ஆளும் ஆளும் அதிகாரத்தை அளித்துள்ளனர். இங்கிலாந்தில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 412 தொகுதிகளை கன்சர்வேட்டிவ் கட்சியும், 121 […]
UK தேர்தல்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவி மற்றும் பிரிட்டன் பிரதமர் பதவி ஆகியவற்றில் இருந்து ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நிறைவு பெற்று இன்று முடிவுகள் வெளியாகின. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய பிரதமருமான ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் இருந்து விலகியுள்ளது. அதே 14 ஆண்டுகளுக்கு […]
UK தேர்தல்: பிரிட்டன் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி 7 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். 650 இடங்களை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நேற்று நிறைவடைந்து. இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் தனி பெரும்பான்மையுடன் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இதற்கு முழு பேறுபெற்றுள்ளார் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக். 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள தொழிலாளர் […]
UK தேர்தல்: பிரிட்டனில் ஆட்சியை இழந்த ரிஷி சுனக், தோல்விக்கு பின்னர், ” இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்.” என பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (வியாழன்) காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் நடைபெற்று இன்று (வெள்ளி) தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 650 இடங்களில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை. இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே பிரதான […]
UK தேர்தல்: ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 81 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தொழிலாளர் கட்சி 360 இடங்களை வென்றுள்ளது. இங்கிலாந்து நாட்டில் நேற்று (வியாழன்) 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கும், தொழிலாளர் கட்சி சார்பாக கீர் ஸ்டார்மரும் பிரதான பிரதமர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு ஆரம்பித்த தேர்தல் இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது. […]
இங்கிலாந்து: தேர்தல் கருத்து கணிப்புகளின்படி இங்கிலாந்தில் ஆட்சி மாற்றம் உருவாகி தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் கடந்த 1997 முதல் 2010 வரையில் 13 ஆண்டுகள் தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. அடுத்து 2010ஆம் ஆண்டு முதல் தற்போது (2024) வரையில் 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் உள்ளது. போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ்க்கு அடுத்து தற்போது கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் […]