ரஷ்யா : 800 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று கமாஸ் ட்ரக் மீது மோதியதில் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் வரை காயமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 20 பெட்டிகள் கொண்ட ரயில், மாஸ்கோவிற்கு தெற்கே 1,200 கிமீ (750 மைல்) தொலைவில் உள்ள கோட்டல்னிகோ நிலையத்திற்கு அருகில் தெற்கு வோல்கோகிராட் பகுதியில் ரயில் தடம் புரண்டுள்ளது. இதனையடுத்து, 324 அவசரகால பணியாளர்கள் […]
ஜெர்மனி : ஜெர்மனியில் நடைபெற்ற பிரபல பாடகி ‘டெய்லர் ஸ்விஃப்ட்’ இசை நிகழ்ச்சியைக் காண்பதற்காக மைதானத்திற்கு அருகே இருந்த மலை மீது ஏரளமான ரசிகர்கள் குவிந்தனர். இவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனியில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதனால், கூட்டம் கடலென திரண்டதால் வரலாறு காணாத புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. பிரபல அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட், பல்வேறு இசை விருதுகளை வென்று, உலக அளவில் மிகுந்த புகழ் கொண்டவர். இவர் அவ்வப்போது இசை நிகழ்ச்சி நடத்துவது […]
US தேர்தல் 2024 : இந்தாண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக முன்னதாக தற்போதைய அதிபர் ஜோ பைடனும் அறிவிக்கப்ட்டனர். ஜோ பைடனின் உடல்நிலை, பேச்சில் தடுமாற்றம் ஆகியவை சொந்த கட்சியினரையே பதட்டமடைய செய்தன. இதனால் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலக்கோரி தொடர் அழுத்தங்கள் எழுந்தன. மேலும், ஜோ பைடனுக்கான தேர்தல் பிரச்சார […]
அமெரிக்கா : இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் 5-ம் தேதி அன்று அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்பும் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். ஆனால் அதன் பிறகு வயது முதிர்வு, பேச்சில் தடுமாற்றம் மற்றும் மந்தமான செயல்பாடு போன்ற காரணங்களால் ஜோ பைடன் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதனால், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பைடன் விலகினார். […]
உக்ரைன் : ஆகஸ்ட் 23ம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக உக்ரைன் செல்லவுள்ளதால், இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உக்ரைன் மீது 2022இல் ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் 2 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரும் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்துகின்றனர். சமீபத்தில், ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி […]
இலங்கை : கடந்த 2022-ம் ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களுக்குள் மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனை தொடர்ந்து அப்போது இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். மேலும், தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று கொண்டார். தற்போது, அதிபராக இருக்கும் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த அதிபர் தேர்தலுக்கான […]
அமெரிக்கா : டெக்சாஸின் ஹூஸ்டன் என்ற பகுதியில் பெய்த கனமழையால், Hammerhead என்ற வகையை சார்ந்த புழுக்கள் வெளியே வர தொடங்கியுள்ளது. ஷவல்ஹெட் அல்லது அம்புக்குறி என்றும் அழைக்கப்படும் சுத்தியல் புழு, ஒரு சுத்தியல் சுறாவைப் போலவே அதன் தனித்துவமான தலை வடிவத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது. பாதியாக வெட்டப்பட்டால் மீண்டும் உருவாகும் தன்மை கொண்டதாம். மேலும், அதனுள் இருக்கும் செயலிழக்கும் நச்சு, மனிதர்களுக்கு தோல் எரிச்சலை ஏற்படுத்தும் அதே விஷம் மற்றும் விலங்குகளை நோய்வாய்ப்படுத்துகிறது. 15 […]
வைரம் : பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிகளவில் இருக்க வாய்ப்பு உள்ளதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. நீங்கள் ஒரு வைரத்தைக் கண்டால், எவ்வாறு உணருவீர்கள். சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு வைரங்கள் மட்டுமே சிதறிக் கிடந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? புதனின் மேற்பரப்பில் ஏராளமான வைரங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் ஜர்னலில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் இது […]
அமெரிக்கா : அமெரிக்கா அதிபர் தேர்தலில் இருந்து விலகிய பிறகு நேற்று (புதன்கிழமை) மக்களிடம் ஜோ பைடன் முதன்முறையாக உரையாற்றினார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலானது நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முதலில் ஜனநாயக கட்சி சார்பாக பைடன் போட்டியிட இருந்தார். ஆனால், அவரது வயது முதிர்வு மற்றும் உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் அவர் தேர்தலில் இருந்து விலகி இருந்தார். மேலும், தற்போதைய துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிசையும் அதிபர் வேட்பாளராக முன்மொழிந்தார். அதனை […]
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் : உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில், பிரான்ஸ், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரான்ஸ், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், சிங்கப்பூர் பாஸ்போர்ட் கொண்டு, 195 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
பிரேசில் : ரியோ டி ஜெனீரியோவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் உள்ள 13 சுறா மீன்களை பரிசோதனை செய்ததில், அவற்றின் தசைகள் மற்றும் கல்லீரலில் கொக்கைன் போதைப்பொருள் கலப்பு கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக இயங்கும் போதைப்பொருள் தயாரிப்பு ஆலைகளில் இருந்து ரசாயனம் கடலில் கலக்கப்படுவதால் இவ்வாறு நிகழ்வதாக கூறியுள்ளனர். ஓஸ்வால்டோ குரூஸ் அறக்கட்டளை நடத்திய இந்த ஆராய்ச்சி, சுறாக்களில் கொக்கைன் இருப்பதை முதலில் கண்டறிந்தது. அதாவது, சட்டவிரோத போதைப்பொருள் ஆய்வகங்களில் இருந்தோ அல்லது போதைப்பொருள் […]
பாஸ்போர்ட் தரவரிசை: உலகளாவிய சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசை பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 82வது இடத்தில் உள்ளது. லண்டனை சேர்ந்த பிரபல உலகளாவிய குடியுரிமை ஆலோசனை நிறுவனமான ஹென்லி பார்ட்னர்ஸ் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலானது ஒரு நாட்டின் பாஸ்போர்ட் கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். விசா இல்லாமல் ஒரு நாட்டின் பிரஜையை எத்தனை நாடுகள் வரவேற்கும் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி, ஹென்லி பாஸ்போர்ட் தரவரிசையின் கீழ், சிங்கப்பூர் முதலிடத்தை […]
நேபாளம் : விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் காத்மாண்டு விமானத்தில் பயணம் செய்த 19 பேரில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், சவுரியா ஏர்லைன்ஸ் விமானம், 19 பேருடன் புறப்பட்ட சில வினாடிகளிலேயே ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கியது. இதில், 18 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுரியா […]
அமெரிக்கா : அமெரிக்க தேர்தலில் களமிறங்கவிருக்கும் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் தேர்தல் பரப்புரைக்காக நிதி திரட்டியுள்ளார். அமெரிக்காவில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக புதிதாக களமிறங்க இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல நன்கொடையாளர்களிடமிருந்து மொத்தமாக 81 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 81 மில்லியன் டாலரை இந்திய ரூபாய் மதிப்பில் சொல்லப்போனால் […]
எலோன் மஸ்க் : ஏஐ வீடியோக்களிலேயே இதுதான் சிறந்த வீடியோ என்பது போல் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தளத்தை கலக்கி வருகிறது. அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவருமான எலான் மஸ்க் பகிர்ந்துள்ள செயற்கை நுண்ணறிவு அதாவது AI மூலம் உருவாக்கப்பட்ட பேஷன் ஷோவின் வீடியோ வைரலாகி வருகிறது. வைரலான அந்த வீடியோவில், உலக தலைவர்கள் மிகவும் நவீன உடையில் நடப்பது காட்டப்பட்டுள்ளது. மேலும் அதில், அமெரிக்காவில் நடந்து […]
அமெரிக்கா : இந்த ஆண்டின் இறுதியில், நவம்பர் -5ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே நேரம் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டி இடுவதாக அறிவித்தார். இந்நிலையில், பைடனுக்கு 81 வயதாகும் நிலையில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதால் பல்வேறு விமர்சனங்களை அவரது கட்சிக்குள்ளயே எதிர்கொண்டார். அதிலும் குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் – ஜோ பைடன் இடையே நடந்த […]
வங்கதேசம் : 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக போராடிய போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு தரும் சட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் , பொதுச்சொத்துக்கள் சேதம் விளைவிக்கும் சம்பவங்களும் அரங்கேறின . பல மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக […]
அமெரிக்கா: இந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் களமிறங்குகின்றனர். குடியரசு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிரம்ப் தேர்தல் பிரச்சாரங்களில் தொடர்ச்சியாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அமெரிக்க மக்கள் மத்தியில் ட்ரம்பிற்கு ஆதரவும் பெருகி வருகிறது. கடந்த வாரம் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக […]
பாரிஸ் ஒலிம்பிக் 2024: 33-ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழா பாரிஸில் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வரத் தொடங்கியுள்ளனர். 206 நாடுகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் தடகளம், பேட்மிட்டன், குத்து சண்டைஎன 16 வகையான போட்டிகளில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பாரிஸ் நகரைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒலிம்பியாட்டின் தொடக்கத்திலும் கிரேக்கக் கடவுள் ஜீயஸைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் […]
மைக்ரோசாப்ட் முடக்கம் : மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் பிரச்னையால், உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர்கள் முடங்கியதால் விமான நிலையத்தில் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தகவல் தொடர்பு பிரச்னையால் 1,390 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், இந்தியாவில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து எனத் தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பாதிப்பால் விமானம் வருகை, புறப்பாடு, பதிவு உள்ளிட்டவை முடங்கியுள்ளன. பல […]