உலகம்

“வளர்ப்பு மகளை திருமணம் செய்யலாம்”! ஈரானின் சர்ச்சை சட்டத்திற்கு குவியும் எதிர்ப்புகள்!

தெஹ்ரான் : ஈரானில், 13 வயது நிரம்பிய வளர்ப்பு மகளை தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கும் சட்டமானது கடந்த வருடம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே, ஈரானில் ஒரு ஆண்டில் மட்டும் 15 வயதுக்கு குறைவான சுமார் 1.84 லட்சம் சிறுமிகளுக்கு திருமணம் நடந்து வருகிறது. அதே போல, அந்த நாட்டில் 10 வயதுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது. மேலும், […]

#Iran 4 Min Read
Iran Flag

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்! 24 பேர் உயிரிழப்பு!

பெய்ரூட் : கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தாக்குதல் குறித்து லெபனானில் உள்ள அதிகாரப்பூர்வ மற்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், நடந்த இந்த வான்வெளித் தாக்குதலில் கட்டிடங்கள் நொறுங்கப்பட்டுள்ளது. இதன் இடிபாடுகளை அகற்றி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி லெபனானின் நடுவில் […]

Israel 4 Min Read
Israel attacked south lebanan

“பைடன், கமலா ஹாரிஸுக்கு ஹிந்துக்கள் மீது அக்கறை இல்லை”! விமர்சனம் செய்த டிரம்ப்!

வாஷிங்க்டன் : வரும் நவம்பர்-5 ம் தேதி அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை இருவரும் தீவிரமாய் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும், கமலா ஹாரிஸுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வாழும் இந்து […]

#Joe Biden 7 Min Read
Donald Trump

வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்! குழந்தைகள் உட்பட 93 பேர் பலி!

காசா : கடந்த வருடம் அக்-7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா பகுதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையே சுமார் ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் காசாவின் பீட்லாஹியா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இஸ்ரேல் […]

#Gaza 4 Min Read
Israel - Gaza War

விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்த தீபாவளி வாழ்த்து! சுனிதா வில்லியம்ஸ் பெருமிதம்!

வாஷிங்க்டன் : கடந்த 5 மாதங்களாகச் சர்வதேச விண்வெளியிலிருந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார் சுனிதா வில்லியம்ஸ். சாதாரண ஒரு சோதனைக்காக விண்வெளி சென்ற இவர், திரும்பப் பூமிக்கு வர முடியாமல் விண்வெளியில் சிக்கி உள்ளார். மேலும், அதோடு தற்போது அடுத்தகட்ட ஆய்வையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், உலகம் முழுவதும் நாளை மறுநாள் (அக்-31, வியாழக்கிழமை) தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையாகப் பார்க்கப்படும் இது, உலகம் முழுவதும் பரவி உள்ள ஹிந்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு […]

Diwali Wishes 4 Min Read
Sunita Willilams

இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் : ஈரானின் ராணுவ தளம் சேதம்!

தெஹ்ரான் : ஈரானின் தலைநகரான தெஹ்ரான் பகுதியில், கோஜிர் இராணுவ தளத்தில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதை அமைப்பு மற்றும் ஏவுகணை தயாரிக்கும் தளங்களை என ஈரான் ரகசியமாக செயல்படுத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் அங்கும் இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தி இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த காசா-இஸ்ரேல் போரில், ஆதரவாக ஹிஸ்புல்லாக்களும், ஹமாஸ் அமைப்பும் களமிறங்கியது. இந்த விளைவாக இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய […]

#Iran 5 Min Read
Israel - Iran Attack

“இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம்” – ஈரான் ஆவேசம்.!

இஸ்ரேல் : ஹமாஸ் தலைவர் ஈரானில் வைத்து இஸ்ரேலால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அக்.1இல் இஸ்ரேல் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். இந்த தாக்குதலில் 4 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், “இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐநா விதிகளுக்கு எதிரானது. ஈரானுக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க […]

#America 3 Min Read
Iran miltry

ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேலுக்கு அமெரிக்கா தீடீர் எச்சரிக்கை..!

அமெரிக்கா : ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது இஸ்ரேல், இன்று அதிகாலை முதலாக கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் அணு உலைகள், எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு, இஸ்ரேலுக்கு அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 1 தேதி நடந்த தாக்குதலுக்கு தற்காப்பாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரானின் இராணுவ […]

#America 3 Min Read
america warns israel

ஈரானில் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல்!

இஸ்ரல் : ஈரானின் “இராணுவ இலக்குகள்” மீது, இன்று (அக்டோபர் 26) அதிகாலையே துல்லியமான வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம். அதன்படி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அக்டோபர் 2 ஆம் தேதி ஹெஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் மீது, 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி […]

#IDF 4 Min Read
Israeli Iran

அமைதி பெரும் லடாக் எல்லை.. புதியதாக மலரும் இந்தியா – சீன உறவு.!

லடாக் : கடந்த 4 ஆண்டுகளாக எல்லையில் இந்தியா-சீனா இடையே நிலவி வந்த பதற்றம் தற்போது மெல்ல மெல்ல முடிவுக்கு வருகிறது. அதாவது, கிழக்கு லடாக் பகுதியில் உள்ள டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளிகளில் இந்தியா மற்றும் சீனா இராணுவத்தினர் படைகளை விலக்கி வருகின்றனர். இருப்பினும், இரு நாட்டு படைகளும் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #WATCH | Leh, Ladakh | On the agreements […]

#China 7 Min Read
Ladakh - India -China

ஓட்டுக்கு பணம் அள்ளிக்கொடுத்த எலான் மஸ்க்…தடை விதித்து எச்சரிக்கை விடுத்த கோர்ட்!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டோனால்ட் டிரம்ப் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தனித் தனியாக ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இருவருக்கும் ஒபாமா, எலான் மஸ்க் போன்ற பெரிய பெரிய ஆட்களும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக, டோனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களில் ஒருவருக்குத் […]

2024 US elections 4 Min Read
Elon Musk donald trump SAD

துருக்கியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி.. 32 இலக்குகளை குறிவைத்து அழிப்பு.!

துருக்கி : தலைநகர் அங்காரா அருகே துருக்கியின் உயர்மட்ட பாதுகாப்பு நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மும்பைத் தாக்குதல் சம்பவம் போல நடந்த இந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்த தகவலின்பேரில் விரைந்து வந்து 2 தீவிரவாதிகளை துருக்கி பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது.  இதனையடுத்து, இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த துருக்கி, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குர்திஷ் பயங்கரவாதிகளின் 32 இடங்கள் மீது, பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று […]

CCTV footage 4 Min Read
Turkey Terror Attack

“உடனடியாக வெளியேறுங்கள்”! இலங்கையில் உள்ள இஸ்ரேலியருக்கு எச்சரிக்கை!

இலங்கை : இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே கடந்த ஒரு வருடமாகப் போரானது நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் ஹமாஸ் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து குறிவைத்துத் தாக்கினார்கள். இதில், சமீபத்தில் கூட இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான யாஹ்யா சின்வார் உயிரிழந்தார். இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் உச்சம் பெற்றுள்ளது. இதன் எதிரொலியாக தற்போது இலங்கையில் கடலோர பகுதிகள் மற்றும் […]

#Srilanka 3 Min Read
Israel People Alert

“அமெரிக்கா முதல் பெண் அதிபரை வரவேற்க தயாராக உள்ளது”…கமலா ஹாரிஸ் பேச்சு!

அமெரிக்கா : வருகின்ற நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டோனால்ட் டிரம்ப் இருவரும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் காரணத்தால் அமெரிக்க மக்களுக்கு மத்தியில் ” யார் தேர்தலில் வெற்றிபெறப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த சூழலில் அரசியல் பிரச்சாரத்தில் மும்மரமாக இருக்கும் இருவரும் மாறி மாறி பிரச்சாரங்களில் விமர்சனம் செய்தும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். […]

American Election 2024 4 Min Read
trump angry kamala harris

McDonald உணவால் அதிகரித்த E-coli பாதிப்பு.! ஒருவர் மரணம்.. அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள்!

கொலராடோ : அமெரிக்காவில் McDonald’s Quarter Pounders சாண்ட்விச் சாப்பிட்டவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் E. coli பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. கொலராடோவில் பிரபல உணவகமான McDonald’s Quarter Pounders-ல் சாண்ட்விச் சாப்பிட்டு இதுவரை 10 மாகாணங்களிலிருந்து குறைந்தபட்சம் 49 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நோய் பரவலை தடுக்க, அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், உணவு பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த உணவில் பதப்படுத்தப்பட்ட வெங்காயம் மற்றும் மாட்டிறைச்சியால் இது ஏற்பட்டிருக்கலாம் […]

america 5 Min Read
McDonald's burgers tied to E Coli

முதன்முறையாக ஈரான் பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி! சந்திப்பில் நடந்தது என்ன?

இஸ்ரேல் :இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில், இந்த போர் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி ஒருவருக்கொருவர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக இரண்டு நாடுகளிலும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு இந்த சூழலில், ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, உள்ளிட்ட சில […]

#Iran 6 Min Read
Pezeshkian pm modi

‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையிலே தீர்வு வேண்டும்’ ..புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு இந்த ஆண்டு ரஷ்யாவில் உள்ள கசான் பகுதியில் நடைபெறுகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் கலந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இன்று காலை பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் ரஷ்ய அதிபரான விளாதிமிர் புடினுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். […]

16th BRICS Summit 3 Min Read
PM Modi - Vladimir Putin

16வது பிரிக்ஸ் மாநாடு : ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் முக்கியத் தலைவர்கள் ஒன்றிணைந்து உலகப் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவுள்ளனர். இதில் கலந்துக் கொள்ள 2 நாட்கள் அரசு முறை பயணமாக, இன்று காலை டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. காலை […]

16th BRICS Summit 3 Min Read
Narendra Modi in Russia

கட்டியணைக்க 3 நிமிடங்கள் மட்டுமே., விமான நிலையத்தில் வினோத கட்டுப்பாடு.!

நியூசிலாந்து : தனது குடும்பம், நண்பர்கள், சொந்த ஊர் என அனைத்தையும் விட்டு விமானத்தின் மூலமோ, ரயிலின் மூலமோ நீண்ட தூரம் நீண்ட நாட்கள் பணிக்காகவோ, படிப்புக்காகவோ பயணிக்கும் நபரை அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பாச மிகுதியில் கட்டிபிடித்து வழியனுப்புவது வழக்கம். இந்த நடைமுறைக்கு நியூசிலாந்து விமான நிலையம் கட்டுப்பாடு விதித்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்நாட்டில் தெற்கு தீவில் உள்ள டுனெடின் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து அதிகம் இருக்கும். அங்கு வரும் கூட்டத்தை […]

Dunedin International Airport 4 Min Read
New Zealand Airport restricted to Good bye Hugs

ஹிஸ்புல்லா ‘ரகசிய’ குழியில் பல்லாயிரம் கோடி! அழிக்க எச்சரிக்கை கொடுத்த இஸ்ரேல்!

பெய்ரூட் : இஸ்ரேல் விமானப்படை சமீபத்தில் ஹிஸ்புல்லாவின் நிதி சோர்ஸ்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. அதில், தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட காரணத்தால் ஹிஸ்புல்லா அமைப்பின் பொருளாதார சோர்ஸ்கள் அழிக்கப்பட்டன. மேலும், இந்த தாக்குதலின் போது தான், ஹிஸ்புல்லா அமைப்பினர் பணம் மற்றும் தங்கம் வைத்துள்ள ரகசிய பதுங்கு குழியை இஸ்ரேல் எதிர்ச்சியாகக் கண்டுபிடித்தது. இந்த ரகசிய பதுங்கு குழி பெய்ரூட் மருத்துவமனையின் அடியில் ரகசியமாக அமைக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் இந்த ரகசிய பதுங்கு குழியில் நூற்றுக்கணக்கான […]

#Gaza 6 Min Read
Hezbollah bunker