பெய்ரூட் : லெபனானில் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்தகட்டமாக தரை வழி தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியானது. அதன்படி, லெபனானின் சில குறிப்பிட்டப் பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல். இந்த ராணுவ தாக்குதலுக்கு ‘Operation Northern Arrows’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. லெபனான் நாட்டின் தெற்குப் பகுதிக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்தால் சரியான பதிலடி தர, தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத்தலைவர் காஸிம் கூறி உள்ளார். காசாவில் […]
லெபனான் : இஸ்ரேல் ராணுவமானது பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பு மீது தொடர் தாக்குதலை நடத்தி வருவது போல, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு மீதும் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான சயீத் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் செயல்பாடுகள் குறையும் என எதிர்பார்த்து காத்திருந்த இஸ்ரேலுக்கு சற்று அதிர்ச்சி […]
லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா உயிரிழந்த பிறகு, ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக ஹசன் கலீல் யாசின் நேற்று அறிவிக்கப்பட்டார். அவர், தலைவராக அறிவிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ITF தனது எக்ஸ் பதிவில், தங்களது தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் பாதுகாப்பு பிரிவு தளபதியும், நிர்வாகக் குழு உறுப்பினருமான நபில் கவுக் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து லெபனான் மீது, இஸ்ரேல் […]
அமெரிக்கா : நாளை முதல் வானில் 2 நிலவுகள் தெரியும் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெறும் கண்ணால் நம்மால் பார்க்க முடியாது என்றும், வானில் உள்ள கோள்களை பார்க்க பயன்படுத்தப்படும் சிறப்பு தொலைநோக்கிகள் கொண்டு பார்க்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதாவது, வானில் நிறைய விண்கற்கள் புவி ஈர்ப்பு விசைக்கு அப்பால் சுழன்றுகொண்டு இருக்கின்றன. அதில் ஏதேனும் ஒரு விண்கல் அவ்வப்போது புவி ஈர்ப்பு விசைக்குள் கட்டுப்பட்டு சில நாட்கள் புவி […]
லெபனான் : இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில்,ஹிஸ்புல்லா அமைப்பினரின் தலைமையகம் தரைமட்டமானது. அப்போது அந்த அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா அந்த தாக்குதலுக்கு உயிரிழந்தார் என இஸ்ரேலின் பல ஊடகங்கள் தெரிவித்தது. அப்போது ஈரானின் டஸ்நிம் ஏஜென்சி தலைவர் நஸ்ரல்லா பாதுகாப்பாக இருக்கிறார் என தெரிவித்தனர். அதன் பின் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. […]
லெபனான் : இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர்-7 ம் தேதி ஹிஸ்புல்லா அமைப்ப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் இரான் ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பை தாக்கி வந்தது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொள்ளப்பட்ட்டனர். மேலும், மாறி மாறி நடைபெற்று வரும் தாக்குதலில் இதுவரை அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், 21 நாள் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென […]
அமெரிக்கா : முன்பை விட சமீப காலத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது வளர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் தற்போது மிக மோசமான நிலைமைக்கு அது சென்று விட்டது. குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த 2024-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மீது […]
லெபனான் : இஸ்ரேல் மற்றும் அதன் அண்டை நாடான லெபனானுக்கும் இடையே கடந்த ஒரு வருடகாலமாக தீராப்பகை முற்றி வருகிறது. அதிலும், லெபானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடுமையான தாக்குதல் என்பது நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 1500க்கும் மேற்படூர் காயம் அடைந்தனர், பலரது நிலைக் கவலைக் கிடமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் நடத்திய […]
லெபனான் : இஸ்ரேல் நேற்று லெபனான் மீது நடத்திய அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த தளபதி இப்ராகிம் முகமது கோபிசி தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது, அதனை ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதி செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லெபனான் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த முக்கிய தளபதியான இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். அவரை தொடர்ந்து அடுத்ததாக ஹிஸ்புல்லா அமைப்பின் அடுத்த முக்கிய […]
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா செய்தார். இந்நிலையில், அந்நாட்டு இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் கட்சியின் எம்.பி. ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில்ஹரிணி அமரசூரியவுக்கு, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய, நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், […]
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேலை தாக்கியுள்ளனர். இஸ்ரேலின் ராணுவ விமானப்படை இடங்களை குறிவைத்தே இந்த ராக்கெட்டுகளை ஏவியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகள் அமைந்துள்ள தெற்கு […]
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றது. தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருந்தாலும், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் ஜனதா விமுக்தி பெரமுன […]
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா களம் கண்டார். அதே நேரத்தில் இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவரான அனுரா குமாரா திஸாநாயக்க போட்டியிட்டார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் இழுபறி நீடித்த நிலையில் 2-வது விருப்ப […]
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவரை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா களம் போட்டியிடுகிறார். மேலும், இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவரான அனுரா குமாரா திசநாயகே, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறார். இந்த மூவருக்கும் இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவி வருகிறது. இவ்ரகள் […]
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் லெபனான் நாட்டின் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதியான இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டுள்ளார். இவரை அமெரிக்கா நாடு தீவிரமாக தேடிவந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 66 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அதில் 9 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் […]
பெய்ரூட்: லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள், மற்றும் சூரிய மின் சக்தியால் இயங்கும் சில உபகரணங்கள் வெடித்து சிதறியுள்ளது. இதில் 32 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் லெபனானில் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினமும் அதே போல் வாக்கி-டாக்கிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறி இருக்கிறது. வெடித்து சிதறியுள்ள இந்த […]
அமெரிக்கா : பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 21ஆம் தேதி 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார். செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் அமெரிக்கா செல்லும் பிரதமர் அங்கு நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் . இந்த மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார். இந்த அமெரிக்க பயணத்தில், வரும் செப்டம்பர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்கா வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த […]
வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மீது நேற்று இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த சம்பவமே அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தொழிலதிபரான எலான் மஸ்க் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. டொனால்ட் டிரம்ப் மீது ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால், அதில் அவரது வலதுகாதில் மட்டும் காயம் ஏற்பட்டது. இதனை […]
வாஷிங்க்டன் : நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் வேட்பாளரான டிரம்ப் மீது 2-வது முறையாக துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது. மேலும், இந்த துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா அதிபரான ஜோ பைடன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. இதனால், அதிபர் வேட்பளருக்காக போட்டியிடும் டிரம்பும், கமலா ஹாரிஸுக்கும் இடையே […]
வாஷிங்டன் : கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே நேற்று நடந்த முதல் அதிபர் தேர்தல் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் கமலா ஹாரிஸ் தான் அடுத்த அமெரிக்கா அதிபராகத் தேர்வாவர் என அமெரிக்க ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர்-5 ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், இரு வேட்பாளர்களும் தங்களது வாக்குறுதிகளைக் கிடைக்கின்ற மேடையில் அறிவித்து […]