அல்பேனியா நாட்டின் துறைமுக நகரம், டூயுரஸ். இங்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.05 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்தது. மேலும் இதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் சேதமாகின. இது 5.4 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், […]
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் நிக்சன். 50 வயதை கடந்த இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு அளித்து இருந்துள்ளார். மேலும் அந்த மனுவின் தனது மனைவியில் கையெழுத்தையும் போட்டு, மனைவி பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்துசமர்ப்பித்துள்ளார். இதனை பார்த்த நீதிமன்றம் இவர்க்கு விவாகரத்து அளித்துவிட்டார். பின்னர் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே சண்டை வர, விவாகரத்து விஷயத்தை உளறிவிட்டார். […]
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த எண்ணெய் ஆலையை கடந்த வாரம் ஆளில்லா விமானம் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.இதனால் தற்போது கச்சா எண்ணையின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீது நடத்த பட்ட மிக பெரிய தாக்குதலுக்கு சவூதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் […]
அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தை சேர்ந்தவர் சாரா.37 வயதாகும் இவர் சென்ற ஆண்டு மார்பக புற்று நோயால் பாதிக்க பட்ட அவர் சென்ற ஆண்டு அதில் இருந்து மீண்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு திறந்த நீர் விளையாட்டில் பங்கு பெற்ற சாரா தாமஸ் ஆங்கில கால்வாயை முதல் முறையாக 2012 ஆம் ஆண்டும் பிறகு 2016 யிலும் கடந்தார். இந்நிலையில் அமெரிக்க -கனடாவிற்கு இடையில் சாம்ப்லைன் எனும் ஏரியை 104.6 மைல் தூரம் நீந்திய பிறகு தான் சாராவிற்கு புற்று […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் அரசு முறையப்பயணமாக இன்று அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு அவர் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் எனும் நகரில் நடை பெறும் ஹவுடி மோடி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்திய வம்சாவளியினர் 50 பேரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடை பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ஹூஸ்டன் எனும் […]
பிரிட்டன் செல்வதற்காக பொது விசா விண்ணப்பித்திருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இனி தனி ஆங்கில தேர்ச்சி தேர்வை மட்டும் எழுத வேண்டாம் என பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மருத்துவம் மற்றும் செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் ஒற்றை தொழில் சார்(ஓஇடி )ஆங்கில தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது என்று அறிவிக்க பட்டுள்ளது. ஒற்றை தொழில் சார் என்றால் சர்வதேச ஆங்கில மொழி தேர்வாகும்.இந்த தேர்வை எழுதினால் ஆங்கில மொழி பேசும் நாடுகளில் மருத்துவம் […]
சிலி நாட்டில் வண்டி சக்கரத்தில் நடுவே சிக்கிய நாயை அவசர சேவைப் பிரிவினர் பத்திரமாக மீட்டனர். சிலி நாட்டில் உள்ள ஹனோவர் நகரில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு கார் டயர் கிடந்தது. இதனை அங்கிருந்த 8 மாத பெண் நாய் ஒன்று, அந்தப் டயரை பார்த்ததும் தனது தலையால் அதனை உருட்டி மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த நாயின் தலையானது காரின் நடுவே இருந்த வட்டத்திற்குள் நுழைந்தது. தலையை வெளியே […]
நிலவின் தெற்கு பகுதியில் இஸ்ரோ சந்திராயன் விண்கலத்தை தரையிறக்கி உலக சாதனையை புரிய இருந்தது. அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் சிறப்பாக நடந்து ஜூலை 22 ஆம் தேதி GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலமும் சரியான வேகத்தில் விண்ணில் சீறி பாய்ந்து கொண்டிருந்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திராயன் 2 விண்கலம் நிலவில் தரை இறங்குவதாக இருந்தது. பின்னர் நிலவிலிருந்து 2.1KM தொலைவில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவிற்கு […]
இலங்கை அதிபர் தேர்தல் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரி மஹிந்த தேசப்ரிய அறிவித்துள்ளார்.அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 16 ந் தேதி நடை பெறும் என்றும் அக்டொபர் 7 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடை பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜ பக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது.இலங்கை […]
இந்தோனேசியாவில் இரண்டு முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.இது குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் முதலில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜாவா தீவில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நிலநடுக்கம் ரிக்ட்ருக்கு 5.6 ஆக பதிவானது. அடுத்த சில நிமிடங்களில் பாலி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்ட்ருக்கு 6.1 ஆக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் […]
உலகளவில் சிறந்த 200 கல்லூரிகள் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள. வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்தும் வகையில் கற்ப்பிக்கும் வகையில் கல்லூரிகளை வரிசைப்படுத்தியுள்ளனர். இதில் இந்தியாவில் 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அவை, டெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரி, மும்பையில் உள்ள ஐஐடி கல்லூரி, சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகள் இதில் இடம்பெற்றுளளன. முதலிடத்தில் அமெரிக்காவில் உள்ள எம்ஐடி ( Massachusetts institute of technology ), இரண்டாம் இடத்தில் ஸ்டாண்டர்ட் யூனிவர்சிட்டி, மூன்றாம் இடத்தில் கலிபோர்னியா […]
சுனிதா வில்லியம்ஸ் 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்த தீபக் , இஸ்சோவேனியாவை சேர்ந்த போனி பாண்ட்யா தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவர் 1983 ஆம் ஆண்டு மாசச்சூசெட்டில் உள்ள நீதாம் உயர்நிலை பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.இந்நிலையில் 1987 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் அகாடமியில் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். அதற்கு பிறகு இவர் 1995 ஆம் ஆண்டு ஃபுளோரிடா தொழில் நுட்பக்கழகத்தில் அவரது முதுகலை படிப்பை முடித்தார். […]
பாகிஸ்தான் காஷ்மீர் எல்லை பகுதிகளில் பல தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியான மான் ஷெரா என்ற இடத்தில் புதிய இராணுவ விமானதளத்தை பாகிஸ்தான் அமைக்க முடிவெடுத்துள்ளது. இந்த ராணுவ தளம் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 1600 மில்லியன் ரூபாயாம். மேலும் இந்த விமானத்தளம் தலைநகர் ஸ்ரீ நகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விமானத்தளம் உருவாக இருக்கிறதாம்.இந்த விமான தளத்தில் இருந்து ஸ்ரீ நகர் வர வேண்டுமானால் 5 […]
ஜப்பான் நாட்டை சேர்ந்தவர், அகிஹிட்டோ. இவர், ஹட்சுநே மிக்கு என்ற அனிமேஷன் நாடகத்தை பார்த்து வந்துள்ளார். அதில் மிக்கு என்ற பெண் கதாபாத்திரத்தின் மீது அவர் காதல் கொண்டார். இந்நிலையில், அவர் அந்த அனிமேஷன் கதாபாத்திரமான மிக்குவை திருமணம் செய்துள்ளார். மேலும் அவருக்கு “ஹிக்கிக்கோமோரி” என்ற வியாதி இருப்பது தெரியவந்துள்ளது. ஹிக்கோகோமோரி என்பது சமூகத்துடன் அண்டாமல் இருப்பது. மேலும் அவர் கூறியதாவது, “மிக்குவின் காணொளி மற்றும் புகைப்படத்தை பார்த்தால் மட்டுமே எனக்கு ஆறுதலாக இருக்கும். அதனுடைய முப்பரிமாண (Three-Dimensional) […]
குளியல் தொட்டியில் குளிக்கும் பொது, சார்ஜ் செய்து வைத்த செல்போன் விழுந்ததால், ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த எல்ஜினியா என்ற பெண். இவர் சம்பவத்தன்று, தனது கைபேசியுடன் குளியலறைக்கு சென்றுள்ளார். குளியல் தொட்டிக்கு அருகில் உள்ள மின் இணைப்பில் தனது கைபேசிக்கு சார்ஜ் போட்டுவிட்டு, குளிக்க தொட்டிக்குள் இறங்கினார். அப்பொழுது, எதிர்பாராத விதமாக அவரின் கைபேசி தவறி தொட்டிக்குள் விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். எல்ஜினியாவின் இறப்பு, அந்த […]
பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் நடக்கும் சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் “காஷ்மீர் போன்ற விஷயங்களைப் பொறுத்தவரை, இது பேச்சுவார்த்தைகளை ஆக்கிரமிக்கும் ஒரு முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகள் மற்றும் அதிகமான “மூலோபாய சிந்தனையை” உள்ளடக்கிய பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக அவர் […]
சௌதி அரேபியாவில் எண்ணெய் வயல்களை இரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை வைத்து தாக்கியுள்ளதாக சௌதி அரேபியா இரான் மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலை சௌதி அரேபியாவிற்கு ஆதரவு அளிக்கும் ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானத்தை வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தார்கள் . ஆனால் இதில் இரானின் பங்கு இருப்பதாகவும் சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது. மேலும் சௌதி அரேபியா எந்த இடத்தில் தாக்குதல் நடத்த பட்டது என்ற தகவலை […]
ஆப்ரிக்காவில் தான்சானியாவின் காசாலா என்ற காட்டு பகுதியில் பத்தடி நீலம் கொண்ட மலை பாம்பை ஆப்பிரிக்காவை சேர்ந்த மக்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிடித்துள்ளனர். தெய்வீக சக்தி கொண்டது என்று நினைத்து மலை பாம்பை பிடித்து ஆப்பிரிக்காவை சேர்ந்த மக்கள் அதற்கு பூஜை செய்து வழிபட்டுள்ளனர். மேலும் அவர்கள் இந்த மலை பாம்பிற்கு பல உணவுகளை படைத்தும் வழிபட்டுள்ளனர். அந்த மலைப்பாம்புக்கு உணவுகள் கொடுத்து வழிபட்டால் நல்லது நடக்கும் என்று நினைத்து பக்தர்கள் மலைப்பாம்பு திணறும் அளவிற்கு […]
பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறக்க அனுமதி மறுத்துவிட்டது பாகிஸ்தான் அரசு. இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும்,அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க உள்ளதாகவும் அறிவித்தது.ஆனால் இந்தியாவின் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 21-ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார்.இதனால் இந்தியா சார்பில் பாகிஸ்தானிடம் அந்நாட்டு வான்வழியாக பறக்க அனுமதிகோரியிருந்தது.இந்த […]
தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு புத்தர் கோவிலில் புலிகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வந்தன. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் வளர்ப்பு பிராணிகள் போல அங்குள்ளவர்களால் வளர்க்கப்பட்டு வந்ததால் அந்த குறிப்பிட்ட புத்தர் கோயிலை சுற்றுலாவாசிகள் புலிகள் கோவில் என்றே அழைக்கபடுகின்றன. இந்த காப்பகத்தில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்க புலிகள் முறைகேடாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மேலும் அப்புலிகளை தவறான செயலுக்கு பயன்படுத்துகின்றனர் என குற்றம் கூறி தாய்லாந்து அரசு அப்புலிகளை மீட்டு வனக்காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். […]