அமெரிக்காவில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தவர் வில்சன் ஸ்மித். இவர் தீவிர வலதுசாரி ஆதரவாளர் ஆவார். இவர் உக்ரைனில் உள்ள வலது சாரிகளுக்காக போராட எண்ணி உள்ளார் என அமெரிக்க உளவு துறை கூறி கைது செய்துள்ளது. மேலும், இவர் தனது வலது சாரி நண்பருடன் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது பற்றி ஆலோசித்து உள்ளார் என்றும், அமெரிக்காவில் உள்ள ஊடகம் ஒன்றை வெடிகுண்டு வீசி தாக்குவது தொடர்பாக ஆலோசித்ததாகவும், அதற்காக திட்டம் தீட்டியதாகவும் கூறியும் அமெரிக்க […]
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் 737 மேக்ஸ் ரக விமானங்களை தயாரித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் இந்த விமானங்கள் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் விபத்துள்ளாகின. இந்தோனேசியாவில் நடந்த விபத்தில் 189 பேரும், எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர். இதில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 346 பேர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்திற்குறிய காரணத்தை கண்டுபிடித்த போது சாப்ட்வேர் மற்றும் தவறான சென்சார் தகவல்கள் தான் தெறியவந்தது. இதன் பின் 737 மேக்ஸ் […]
பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. சாலைகள் துண்டிப்பு, ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் வணிகவளாகங்களை விட்டுவெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.இந்த நிலநடுக்கம் இந்தியாவில் உள்ள வடமாநிலங்களிலும் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுகலை சேர்ந்த சிறுவன் ஒருவர் கால்பந்தாட்ட விளையாட்டை விளையாடி கொண்டிருக்கும் போது இன்னொரு சிறுவனுடன் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அந்த சிறுவனின் பல் மோதி பலத்த காயம் ஏற்பட்டது.பின்பு அந்த பயனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த பையனுக்கு மருத்துவர்கள் ஆன்டி பயோடிக் மாத்திரையை கொடுத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்கள். மறுநாள் காய்ச்சல் வந்து விட்டதால் அந்த பகுதியில் இருந்து சீல் வடிய தொடங்கியுள்ளது. அதற்கு பிறகு 12 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சி.டி ஸ்கேன் எடுத்து […]
சமூக வலைதளங்களில் மிக முக்கியமான ஒன்றாக உள்ள இன்ஸ்டாகிராமில் தங்களது திறமைகளை சிலர் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் அதிகமான பார்வையாளர்களை கொண்டு வருமானமும் சம்பாதித்து வருகின்றன. இந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மிகல்யா என்ற 21 வயது இளம் பெண் ஒருவர் தனது நாக்கு மூலமாக இந்த வருடம் 70 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளார். இவருக்கு மற்றவர்களை போல நாக்கு இல்லாமல் அதை விட நீளமான நாக்கு உள்ளது. இதன் காரணமாக […]
உலகின் மிக பழமைவாய்ந்த சுற்றுலா தளமும் மிக பெரிய பயண நிறுவனமுமான தாமஸ் குக் எனும் நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவிக்க பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் சமீபகாலமாக கடும் தொழில் சரிவை சந்தித்து வந்ததால் இந்த நிறுவனத்திற்கு 250 மில்லியன் டாலர் அளவிற்கு தொகை தேவை பட்டதால் இந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்க பட்டுள்ளது. மேலும் அந்த பணத்தை திரட்டுவதற்கான முயற்சிகள் ,பேச்சு வார்த்தைகள் பயன் அளிக்காததால் இந்த நிறுவனம் திவாலானதாக தற்போது தாமஸ் […]
அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடிக்கு நிகழ்ச்சி நடை பெற்றது.இந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டி பேசினார்.அதில் அவர் பேசியதாவது, ” பிரதமர் மோடியின் செயல்பட்டால் இந்திய மிக பெரிய வளர்ச்சி பாதையில் செல்கிறது. அவர் மீது நம்பிக்கை வைத்து 60 கோடி இந்தியர்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். மேலும் அவர் அமெரிக்க இந்திய உறவு முன்பை விட வலுவாக இருக்கிறது என்றும் அமெரிக்காவின் நம்பிக்கை உரிய […]
கனடாவை சேர்ந்த 28 வயதான ஜோஷாவா , அமண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோஷாவா தன்னுடைய ஐந்து வயது மகனை தூக்கி கொண்டு நயாகரா ஆற்றில் தற்கொலை செய்ய சென்றுள்ளார். அப்போது அவரது மகன் கூச்சலிட்டு கத்தினார். மகனை காப்பாற்ற ஒரு புறம் தாய் அமண்டா ஓடி வந்தார். நயாகரா நெருங்கியதும் ஜோசப் தனது மகனுடன் ஆற்றில் குதித்தார். மகனை காப்பாற்றுவதற்காக […]
இனி செயல்பட வேண்டும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் ஐ.நா.வின் பருவநிலை மாற்றத்திற்கான உச்சிமாநாடு நடைபெற்றது.இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.அவரது உரையில்,பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது. இனி செயல்பட வேண்டும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும் .நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை தொடங்கியுள்ளோம்.பருவநிலை மாற்றத்தை சமாளிக்க மாபெரும் முயற்சி தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவில் இரு மலைகலை இணைக்கும் உலகின் மிக பெரிய பாலமானது, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட இந்த பாலமானது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த பாலமானது, 144 மில்லியன் அமெரிக்கா டாலர் செலவில் கட்டப்பட்டது. ஹூயுபியில் உள்ள மிதக்கும் பாலத்தை விட இந்த பாலம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
டெரோசர் பறவையின் இறக்கை எச்சங்கள், இங்கிலாந்தில் உள்ள விட் என்ற தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தொல்லியல் ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது பாறையில் படிமங்களாக இருந்த சில பொருட்களை ஆராய்ந்து வந்த பொது, அதில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டெரோசர் என்ற பறவையின் இறகை கண்டுபிடித்தனர். அந்த இறகானது, 20 அடி நீளம் கொண்டது. மேலும், அந்த பறவை சுமார் 200 கிலோவுக்கு அதிமாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது […]
பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி என்ற இடத்தை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.அப்போது அந்த பேருந்து சிலாஸ் எனும் இடத்தை அடைந்தவுடன் பேருந்தில் பிரேக் பிடிக்காமல் தனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது . பின்பு பேருந்து மலையில் மோதி விபத்திற்குள்ளானது. அந்த பேருந்தில் பயணித்த 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் […]
அமெரிக்காவின் ஹூஸ்டன் என்.ஆர்.ஜி கால்பந்து மைதானத்தில் ஹவுடி மோடி எனும் நிகழ்ச்சி அமெரிக்க வாழ் இந்தியர்களின் சார்பில் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சிறப்பு விருந்தினராக அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் மோடியின் பேச்சை கேட்பதாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் என்றும் உற்சாகத்துடனும் ,துடிப்புடனும் ,ஆளுமையுடனும் செயல் படக்கூடியவர் என்று கூறியுள்ளார். ட்ரம்ப் ஒரு சிறந்த மனிதர் […]
பிரதமர் மோடி ஒரு வார காலமாக அமெரிக்க சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்று பயணத்தில் முதலில் மோடி ஹூஸ்டன் நகரில் நடை பெற்ற ஹவுதி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டார்கள். அமெரிக்காவின் எரிசக்தி நிலையமாக இருக்கும் ஹூஸ்டன் நகரம் டெக்சாஸ் மாகாணத்தில் அதிக மக்கள் தொகையை கொண்ட நகரம். இது அமெரிக்காவின் 4 வது அதிக மக்கள் தொகையை கொண்ட நகரம் என்றும் கூறப்படுகிறது. […]
சீனாவில் நான்சங்கில் எனும் ஊரை சேர்ந்தவர் வாங். 23 வயதாகும் இந்த பெண் மருத்துவ படிப்பை படித்து முடித்துள்ளார். சீனாவில் உள்ள கோவில் மணி பூங்காவில் உள்ள சிலை உள்ளிட்ட பொருட்களின் முன்பு நாணயங்களை வீசினால் அது தீயத்தையும் , நோயையும் விரட்டி நன்மை தரும் என அந்த நாட்டு மக்கள் நம்பி வருகிறார்கள். இந்நிலையில் வாங் சொந்த ஊரான நான்சங்கீல் இருந்து சின்ஜிங்கிற்கு ஸிச்சுவான் எனும் விமான நிறுவனம் மூலம் வந்தார்.இவர் விமான நிலையத்தில் இருந்து […]
சவூதி அரேபிய நாட்டிலுள்ள சில முக்கிய எண்ணெய் கிணறுகள் சென்ற வாரம் வான்வெளி தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டது. இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இருந்தாலும் ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதற்க்கு ஈரான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் போர் தொடுக்க முற்பட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் சவூதி அரேபிய வெளியுறவு […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சோனாரா நகரை சார்ந்த தம்பதி எட்வர்ட் மற்றும் கேத்தி இவர்கள் இருவரும் ஒரு வாரத்திற்கு முன் கதவைத் திறந்து வைத்துவிட்டு டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து வினோதமான சத்தம் ஒன்று கேட்டது. இதையறிந்த தம்பதியினர் எங்கிருந்து சத்தம் வருகிறது என பார்க்க தொடங்கினர். அப்போது சிறுத்தை ஒன்று வீட்டில் உலாவிக் கொண்டிருந்தது. இதை பார்த்த இருவரும் அலறினர். இவர்களின் சத்தத்தை கேட்ட சிறுத்தை கழிவறைக்குள் ஓடி விட்டது. உடனே […]
சீனாவில் சேர்ந்த 14 வயது சிறுமியான, சேசே. இவர், யூடியூப் வீடியோவை பார்த்து நிறைய செய்து வந்தார். அந்த வகையில், காலி டின் ஒன்றில் தீ மூட்டி பாப் கார்னை எளிமையாக செய்யலாம் என்ற விடியோவை பார்த்தார். இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சிறுமி, அதே போல் தனது வீட்டில் செய்ய முயற்சித்துள்ளார். மேலும், அதற்காக அனைத்து பொருட்களையும் தயார் செய்துள்ளார். இதற்கு ஆல்கஹால் டின் ஒன்றை அவர் பயன்படுத்தியதால், தீ பற்ற வைத்தவுடன் அந்த டின் கண்ணிமைக்கும் […]
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் தலை நகர் பாரிஸில் போராட்ட காரர்கள் மஞ்சள் சட்டை அணிந்து மீண்டும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில வாரங்களாக ஓய்ந்திருந்த இந்த போராட்டம் தற்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. தலை நகர் பாரிஸில் நடந்த போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் குண்டு வீசி வருகிறாரகள். அரசுக்கும் அதிபருக்கும் எதிரானதாக மாறிய இந்த போராட்டம் தற்போது வன்முறையில் முடிந்துள்ளது. போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசியதால் ஆத்திரமடைந்த போராட்ட காரர்கள் சாலைகளில் […]
மெக்ஸிகோவில் ஏற்பட்ட புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. மெக்ஸிகோ மாநகரில் பஜா கலிபோர்னியா எனும் தீபகற்ப பகுதியில் மணிக்கு 121 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக மெக்ஸிகோ மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது. […]