பிரிட்டனில் மிகப்பெரிய குடும்பம் என்ற பெருமையை பெற்றுள்ள தம்பதி தான் சூ மற்றும் நோயல் ராட்போர்ட்.இந்த தம்பதிகளுக்கு 21 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளபக்கத்தில் சூ ஒரு பதிவை ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் தங்களுக்கு பிறக்கவிருக்கும் 22 பிள்ளை வரவேற்க குடும்பமே ஆவலாக காத்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தார். இந்த செய்தியை அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன் பதிவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் லங்காஷயர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். […]
கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ உலகில் பலகோடி மக்களை ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழர்களை மிகவும் கவர்ந்துள்ளார் ஜஸ்டின் ட்ரூட்டோ. தமிழ் பண்டிகைகளை வேஷ்டி சட்டையுடன் கொண்டாடியது என தமிழர்களை கவரும் வண்ணம் அவரது செய்கைகள் இருந்ததால் தமிழகத்தில் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். கனடா நாட்டில் தற்போது பிரதமருக்கான தேர்தல் முடிந்துவிட்டது. இதனை அடுத்து கனடா நாட்டில் உள்ள 338 இடங்களில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.ன் இதில் கடந்த முறை 170 இடங்களை கைப்பற்றிய […]
துணிகளுக்கான செலுத்தும் செலவை குறைப்பதற்காக, பிலிப்பைன்ஸைச் நாட்டை சேர்ந்த ஜெல் ரோட்ரிக்ஸ் என்ற பெண்மணி, தனது சூட்கேஸில் அடைத்து வைத்திருந்த அணைத்து ஆடைகளையும் அணிந்தார். இதன் மூலம் அவர் சூட்கேசின் எடை குறைந்தது. இது குறித்த விளக்கத்தை அவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டீருந்தார். அதில், விமான நிலையத்தில் உள்ள கவுண்டரில் தனது சாமான்களை சரிபார்க்கும் போது, கேரி-ஆன் லக்கேஜ் அதிகபட்ச எடை 7 கிலோவை கடந்தால் பணம் கெட்டவேண்டும் என விமான நிலைய அதிகாரி கூறினார். அதற்க்கு […]
விமானங்களை இடையில் நிறுத்தாமல் சேவை வழங்க அனைத்து விமானங்களும் இடையே கடும் போட்டி உள்ளது. இந்நிலையில் உலகில் மிக நீண்ட தூரத்திற்கு விமானத்தை நிறுத்தாமல் செல்வதற்கான முயற்சியில் ஆஸ்திரேலியாவின் குவென்டாஸ் விமான நிறுவனம் களமிறங்கியது. இதற்கான முதல் சோதனை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த சோதனை அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி வரை விமானத்தை வைக்க முடிவு செய்தது செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் நியூயார்க்கில் இருந்து போயிங் 787-9 ரக விமானத்தை புறப்பட்டது. 19 […]
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில் “ஆஸ்திரேலியா காட் டாலேண்ட்” என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு அமைத்து தர இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் நடனமாட கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் மேடைக்கு வரும் போது உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு வந்தனர். இதை பார்த்த நடுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். https://www.facebook.com/GotTalentAU/videos/380827816160283/ இதை தொடர்ந்து இதுபோன்று […]
நாசாவைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிக்கா மெய்ர் என்ற விண்வெளி வீராங்கனைகள் இருவரும் விண்வெளியில் நடந்த முதல் பெண்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். இந்த இரு பெண்களும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே பழுதான பேட்டரிகள் மற்றும் உதிரிபாகங்களை மாற்றுவதற்கு மேற்கொண்ட முயிற்சி வெற்றி அடைந்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ உலகம் முழுவதும் குழந்தைகளை பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனம் பல வருடங்களாக பேபி சோப், பேபி பவுடண், ஷாம்புகள், பாடி லோஷன்கள், மசாஜ் ஆயில் மற்றும் பேபி துடைப்பான்கள் என பல பொருட்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடரில் நோய்கள் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக அமெரிக்க அரசு பரிசோதனைக்கு அனுப்பியது. இந்த பரிசோதனையின் முடிவில் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் […]
இன்று ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது.இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.வருகின்ற 31-ஆம் தேதியுடன் பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு முடிவடைய உள்ளது.இன்று ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.
பூடானில் உள்ள Travel வழிகாட்டி ஒருவரின் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவில் பைக்கில் பூடானுக்கு சுற்றுலா சென்றனர். அதில் ஒருவர் மகாராஷ்டிரா சார்ந்த அபிஜித். இந்தக் குழுவினர் நீண்ட நேரம் பைக்கில் பயணம் செய்தால் ஓய்வெடுக்க பூடானில் டச்சுலா பாஸ் என்ற பகுதியில் ஓய்வு எடுத்தனர். அப்போது அங்கிருந்த நினைவு ஸ்தூபி மீது ஏறிநின்று அபிஜித் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார். அவர் எடுத்த அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த பலர் […]
ஆப்கானிஸ்தான்: நன்கர்கார் மாகாணத்தில் ஹஸ்கா மினா மாவட்டத்தில் உள்ள ஜா தரா பகுதியில் உள்ள மசூதியில் பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 28 பேர் சம்பவ இடத்திலயே பலியானதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், முதற்கட்ட தகலின் படி 62 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து அங்கோரேஜ் என்ற இடத்திலிருந்து உனாலஸ்கா தீவிலுள்ள டச்சு ஹார்பருக்கு பென் ஏர்வேல் விமானம் சென்றது. இந்த விமானத்தில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் உட்பட 38 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் டச்சு ஹார்பர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலைதடுமாறி ஓடுபாதையை தாண்டி சென்றது. இதனால் அருகிலிருந்த ஆற்றின் கரையில் வேகமாக மோதி நின்றது. நல்லவேளையாக விமானம் ஆற்றுக்குள் செல்லாததால் விமானத்தில் இருந்த அனைவரும் உயிர்தப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு […]
டில்லியிலிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள காபூர் நகருக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று கடந்த மாதம் 23-ம் தேதி வழக்கம் போல டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றது. அப்போது இந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 120 பயணிகள் பயணம் செய்தனர். ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதும். 2 பாகிஸ்தான் எப்-16 ரக போர் விமானங்கள் நடுவழியில் மறித்து விமானத்தை தாழ்வான பகுதியில் பறக்கும் படியும் , விமானத்தை பற்றியும் விவரங்களை சொல்ல வேண்டும் என கூறினார். இதை […]
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. இதற்காக பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் இழுபறி நீடித்து வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரசாமே தெரிவித்தார். பின் தெரசா மே ராஜினாமா செய்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் […]
அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் கடந்த 45 ஆண்டுகளாக ராட்சத பூசணிக் காய்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 46 -வது ஆண்டாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தங்கள் தோட்டங்களில் விளைந்த ராட்சத பூசணிக்காய்களை ஏராளமான மக்கள் கொண்டு வந்து போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் லியாடினோ உரின என்பவர் தன் தோட்டத்தில் விளைந்த 986 கிலோ எடை கொண்ட ராட்சச பூசணிக்காயை கொண்டு வந்ததன் மூலம் இப்போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதற்காக லியாடினோவிற்கு பரிசுத் தொகையாக 10 […]
அமெரிக்காவில் குட்டி முதலைக்கு பீர் குடிக்க வைத்த இளைஞர்கள் . அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள திமோதி மற்றும் நோவா ஆஸ்போர்ன் இளைஞர்கள் இருவர் தங்களது பொழுதுபோக்கை கழிக்க சென்ற இடத்தில சும்மா இருக்காமல் தங்களது சேட்டையை குட்டி முதலையிடம் காட்ட அது கையை கடித்துள்ளது . இதனால் கோபமடைந்த திமோதி என்ற 27 வயதுமிக்க இளைஞர் தான் குடித்து மீதம் வைத்திருந்த பீரை அந்த முதலையின் வாயில் ஊற்றியுள்ளார் இதனை அவருடன் இருந்த 22 […]
பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானை தாக்கியதால் பல பகுதிகள் வெள்ளப் பெருக்காலும் கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக ஜப்பானில் இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உயிர் பலி 42தாக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது வந்த தகவலின்படி உயிர் பலி எண்ணிக்கை 70தாக உயர்ந்துள்ளதாக தெறிவித்துள்ளன இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் புயலின் பாதிப்பில் […]
பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானை தாக்கியதால் பல பகுதிகள் வெள்ளப் பெருக்காலும் கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக ஜப்பானில் இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உயிர் பலி 42தாக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், மீட்புதவியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
சிரியாவில் பல நாடுகளை சார்ந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து சிரியா ஜனநாயக படை போர் செய்து வருகிறது. இந்த படை குர்து படை, அரபு ராணுவம், அமெரிக்க ராணுவம் இணைந்தது. சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் விலகியதை தொடர்ந்து குர்து படை மீது பகையாக இருந்த துருக்கி ராணுவம் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான குர்து படை சேர்ந்தவர்களும் ,பொதுமக்களும் பலியாகியுள்ளனர். இந்த சிரியா ஜனநாயக படை சுமார் 12,000 […]
2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது . பொருளாதாரம், அமைதி,மருத்துவம், இயற்பியல்,இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ம் நோபல் பரிசுகள் ஆண்டுதோறு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு துறையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று 2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காக 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .அதில் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜீ,எஸ்தர் டூஃப்லோ, […]
ஜப்பான் நாட்டில் தற்போது புயலின் தாக்கம் அதிகமாகி அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோர புயலுக்கு ஹகிபீஸ் எனும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலினால் 60 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலினால் ஏற்பட்ட கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதாம். இதனால், பொதுமக்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன, இந்த வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 26 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேரை காணவில்லை எனவும், அவர்களை தேடும் பணியில் […]