இஸ்ரேல் : காசா பகுதிகளில் வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள இஸ்ரேல் ராணுவம், கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை வெளியேறும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த போரின் தொடர்ச்சியாக ஹமாஸ் படையினரின் முக்கிய தலைவரான யாஹ்யா சின்வார் கடந்த வியாழக்கிழமை (17-ம் தேதி) இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார். இதற்கு பழி வாங்கும் வித மாக கடந்த வெள்ளிக்கிழமை (18-ம் தேதி) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வீடு மீது, […]
பென்சில்வேனியா : தேர்தல் நெருங்கிவிட்டது என்றாலே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வித்தியாச வித்தியாசமாக எதாவது செய்து பிரச்சாரம் செய்து வாக்குகளைச் சேகரிப்பார்கள். குறிப்பாக அதில் பலரும் கையாண்ட யுக்தி என்றால் சமையலை வைத்துத் தான். இந்தியாவில் பல வேட்பாளர்கள் தேர்தல் தொடங்குவதை முன்னிட்டு வடை, மற்றும் தோசை சுடுவார்கள்…அதைப்போலச் சிலர் டீ ஆற்றுவார்கள். இந்த அரசியல் யுக்தி இந்தியாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் பிரபலமாகிவிட்டது போல. ஏனென்றால், அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டோனால்ட் டிரம்ப் அதைப்போல […]
காசா : வடக்கு ஈராக்கைச் சேர்ந்த யாசிதி இனத்தைச் சேர்ந்த ஃபாவ்சியா அமின் சிடோ, 2014 பயங்கரவாத ஆட்சியின் போது ISIS ஆல் அடிமைப்படுத்தப்பட்ட பல யாசிதி பெண்களில் ஒருவர். அப்போது, ஃபௌசியாவுக்கு 11 வயது என்று கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் அவர் இஸ்ரேலிய இராணுவத்தால் விடுவிக்கப்பட்டார். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் (IDF) காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, 21 வயதுடைய அந்த (யாசிதி பெண்) ஃபவ்சியா அமின் சிடோ, ISIS காவலில் […]
டெல் அவீவ் : கடந்த வியாழன் அன்று ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரை இஸ்ரேல் கொன்றதை அடுத்து , லெபனான் கூட்டாளியான ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு எதிரான போரை அதிகரிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தது இருந்தது. இதனையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். Read More- யாஹியா சின்வர் உயிரிழப்பு : கடைசி நிமிட வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்! குறிப்பாக, லெபனானில் இருந்து இன்று காலை இஸ்ரேலின் டெல் அவிவ் […]
காசா : கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மக்கள் மீது காசா நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தான் யாஹியா சின்வர். அவரை பிடிக்க இஸ்ரேல் ராணுவம் முயற்சித்த போது, சின்வர் தப்பித்து விட்டார். இதனால், அவரை உயிரோடு அல்லது பிணமாக மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் அப்போது தெரிவித்திருந்தது. இப்படி இருக்கையில், நேற்று முன்தினம் தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது […]
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில் சுமார் 42,000-திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த போர் முற்றிய நிலையில் ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி மற்றும் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் நேற்று காசாவில் […]
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர் நடைபெற்று வருகிறது. அதிலும், சமீப நாட்களில் இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை அங்கு மேற்கொண்டு வந்தது. இதில், இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாங்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் ஹமாஸ் தலைவரான ‘யாஹ்யா சின்வர்’. இதனை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்து […]
அமெரிக்கா : இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் போது இருவரும் மாறி..மாறி விமர்சித்தும் பேசிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த கமலா ஹரிஷ் டொனால்ட் டிரம்ப் குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ட்ரம்ப் கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தலில் […]
பங்களாதேஷ் : கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேறிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்காளதேசத்தில் இப்போது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில், ஷேக் ஹசீனாவை நவம்பர் 18-ல் நேரில் ஆஜர்படுத்த வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைமறைவான முன்னாள் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் […]
நைஜீரியா : ஜிகாவா மாநிலத்தில் உள்ள மஜியா நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 147 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. டவுராவின் உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள கானோ-ஹடேஜியா விரைவுச் சாலையில் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள அகாயி பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கையில், எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சட்டென திருப்பிபோது டேங்கர் கவிழ்ந்துள்ளது. அப்போது, டேங்கர் லாரியில் இருந்த கசிந்த […]
லெபனான் : ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரானது, நாளுக்கு நாள் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பணய கைதிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் ராணுவம், மறுபக்கம் ஹிஸ்புல்லா அமைப்பினருடனும் சண்டையிட்டு வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க களமிறங்கியது. மேலும், இந்த ஒரு வருடமாக இஸ்ரேலுக்குப் போருக்கான ஆயுதம், போருக்கான தேவையான நிதியுதவி போன்ற பல உதவிகளை அமெரிக்கா இஸ்ரேலுக்குச் செய்து வந்தது. மேலும், போரில் […]
இஸ்ரேல் : கடந்த ஆண்டு அக்டொபேர்-7 ம் தேதி தொடங்கிய, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தற்போது வரை முடிவுக்கு வராமல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த தாக்குதலில் இது வரை ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்படி நடைபெற்று வரும் போரில் ஹமாஸ்ஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஹசன் நஸ்ரல்லாவின் உயிரிழப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால், ஹிஸ்புல்லா, […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் -5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக இரு கட்சியினரும் செய்து வருகின்றனர். இதில், ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருப்பதாகவும், அடுத்த அமெரிக்க அதிபர் அவர் தான் எனவும் கருத்துக் கணிப்புகளில் கூறப்படுகிறது. இந்த வேளையில், அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பை 3-வது முறையாக கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இன்று கோசெல்லாவில் நடந்த […]
அமெரிக்கா: மனிதனைப் போலவே செயல்படும் ஒரு ரோபோவை உருவாக்குவதற்கு மிக அருகில் வந்துவிட்டான் மனிதன். ஆம், அமெரிக்க தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க் மனிதர்களைப் போலவே நடக்கவும் பேசவும் கூடிய ரோபோவை உருவாக்கியுள்ளார். கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ‘We, Robot’ நிகழ்ச்சியில் டெஸ்லாவின் மனித உருவ ‘ஆப்டிமஸ்’ ரோபோக்களை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்த ரோபோ உங்கள் குழந்தைகளைப் பராமரிப்பது, புல்வெளி வெட்டுவது, பானங்கள் வழங்குவது என நீங்கள் எதைச் செய்ய […]
காசா : கடந்த ஆண்டில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்ட்டனர், பல இடங்கள் இஸ்ரேலில் நாசமானது. மேலும், ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு சிலர் போர் நிறுத்த அடிப்படையில் மீட்கப்பட்டாலும், மீதம் இருக்கும் மக்களை மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. ஒரு ஆண்டை கடந்து நடந்து வரும் இந்த போரில் மட்டும் சுமார் 42,000 […]
பிரேசில் : கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், வெற்றி பெற்ற லுலா டா சில்வா ஜனாதிபதியாக வெற்றிபெறுவதை தடுக்க எதிர்த்து போட்டியிட்ட போல்சனாரோ, சதிச்செயலில் ஈடுபட்டாரா? என பிரேசில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதே வேளை,ஏற்கனவே மூடப்பட்டிருந்த பல்வேறு போலியான எக்ஸ் கணுக்குகளை எலான் மஸ்க் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டார் எனும் குற்றச்சாட்டை பிரேசிலின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான […]
ஸ்டாக்ஹோம் : இந்த ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், முதல் பாதியை அமெரிக்காவின் டேவிட் பேக்கருக்கும், இரண்டாவது பாதியை டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்ப்பர் ஆகியோருக்கு வழங்கியும் நோபல் அகாடமி முடிவு செய்துள்ளது. அதில், “கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக” டேவிட் பேக்கருக்கும், “புரத அமைப்பு கணிப்புக்காக” டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் என மூவருக்கும் இந்த முறை வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் […]
டெல் அவிவ் : கடந்த ஒருவருடமாக ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதிலிருந்து ஒரு புறம் காசா மறுபுறம் ஹமாஸ் மற்றும் மறுபுறம் ஹிஸ்புல்லா என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அதில், நாளுக்கு நாள் இஸ்ரேல் தரைவழியாகவும் வான்வழியாகவும் தாக்குதலைத் தீவிரப் படுத்தி வருகிறது. இப்படி போர் நடைபெற்று வரும் வேளையில், ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தெரிவித்தது. அதன் விளைவாக, ஹிஸ்புல்லா […]
லண்டன் : மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட், ஒரு பெண்ணை காதலிப்பதை நாம் எந்திரன் படத்தில் பார்த்திருக்கிறோம். அது கற்பனை கதைக்கும், சினிமாவிற்கும் ஸ்வாரஸ்யமாக இருந்தாலும் அது நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. ஆனால், நம்மை சுற்றிலும் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு இருப்பதால், அந்த கதைகளும் கூட நிஜத்தில் நடப்பதற்கான அபாயம் தற்போது வந்துவிட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், செயற்கை நுண்ணறிவு அதாவது AI […]
அமெரிக்கா : இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. எனவே, நேற்று ஹமாஸ் நடத்திய தாக்குதல்களின் முதல் ஆண்டு நினைவைக் குறிக்கும் சிறப்பு இரங்கல் கூட்டம் இஸ்ரேலில் நடைபெற்றது. அதைப்போல, இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கும் அமெரிக்காவிலும் இரங்கல் கூட்டம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரத்தை ஒதிக்கு அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சில விஷயங்களை வெளிப்படையாக பேசினார். அதில் அவர் பேசியதாவது, “கடந்த […]